விஜய்யின் பீஸ்ட் படத்திலிருந்து ஒரு ஸ்டில் லீக்காகியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இது இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் படங்களில் ஒன்றாகும். சமீபத்தில் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது. அனிருத் இசையில் அவரும் பாடகி ஜோனிதா காந்தியும் பாடிய அந்த அரபிக் குத்து பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் பாடல் ஞாயிற்றுக்கிழமை, யூ-ட்யூப்பில் 100 மில்லியன் பார்வைகளை கடந்தது.
தற்போது இந்த சாதனையால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், படத்தின் ஒரு காட்சியின் ஸ்டில் ஒன்று சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. அதில் விஜய், நீல நிற டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் உடையணிந்து, தொலைபேசியில் பேசுவதைக் காண முடிகிறது (ஜார்ஜியாவில் நடந்த படப்பிடிப்பின் போது அது எடுக்கப்பட்டிருக்கலாம்). ஒன்றிரண்டு குதிரைகளும் பசுக்களும் அந்த ஃபோட்டோ பின்னணியில் காணப்படுகின்றன.
எப்படி இருந்த விஜயகாந்த் இப்படி ஆகிட்டாரே... அதிர்ச்சியைக் கிளப்பும் புகைப்படம்
துப்பாக்கிக்குப் பிறகு விஜய்யின் சிக்னேச்சர் காட்சியாக இது இருக்கலாம் என ரசிகர்கள் ஊகிக்கத் தொடங்கியுள்ளனர். அந்தப் படத்தில் விஜய் ‘ஐ அம் வெயிட்டிங்’ என்று சொல்வது இன்றுவரை ரசிகர்களின் ஃபேவரிட் சீனாக அமைந்துள்ளது.
சன் டிவி வானத்தைப் போல சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்
இந்த படத்தின் கசிவு பல தளபதி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் விருப்ப நடிகரின் படத்திலிருந்து லீக்கான காட்சி குறித்து சமூக வலைதளங்களில் அவர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். சக ரசிகர்கள் யாரும் அந்தப் படத்தைப் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். டப்பிங் ஸ்டுடியோவில் இருந்து அந்தப் படம் லீக்காகியிருக்கலாம் என்கின்றன முதற்கட்ட தகவல்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.