பீஸ்ட் வெளியீட்டு தேதி... ரஜினி படத்தில் விஜய் ரசிகர்களுக்குக் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

விஜய்

சமீபத்தில் சென்னையின் புறநகரில் பீஸ்ட் படத்தின் மூன்றாவது அட்டவணையை முடித்தனர் படக்குழுவினர்.

 • Share this:
  விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ திரைப்படம் 2022-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

  தளபதி விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, இயக்குனர் செல்வராகவன், யோகி பாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ் மற்றும் அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப் குமார்.

  சமீபத்தில் சென்னையின் புறநகரில் பீஸ்ட் படத்தின் மூன்றாவது அட்டவணையை முடித்தனர் படக்குழுவினர். படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் பூஜா ஹெக்டே, பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் திரையை பகிர்ந்துக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் கூறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த திரைப்படத்தின் சமீபத்திய அப்டேட் என்னவென்றால், நவம்பர் மாதத்தில் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடையும் என்றும், பொங்கல் பண்டிகையையொட்டி படத்தை வெளியிட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

  தவிர, பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் தீபாவளி அன்று சன் பிக்சர்ஸின் 'அண்ணாத்தே' பட வெளியீட்டுடன் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: