ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய்யின் வில்லன் அல்ல செல்வராகவன் - வெளியான புதிய தகவல்!

விஜய்யின் வில்லன் அல்ல செல்வராகவன் - வெளியான புதிய தகவல்!

விஜய்

விஜய்

செல்வராகவன் நடிக்கிற வேகத்தைப் பார்த்தால் இயக்கத்தை ஒதுக்கிவைத்து முழுநேர நடிகராகி விடுவார் என அவருக்கு நெருக்கமானவர்களே கூறி வருகின்றனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் இயக்குனர் செல்வராகவன் முக்கியமான வேடம் ஒன்றில் நடித்துள்ளார். அவர் வில்லனாக நடித்து இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர் வில்லனாக நடிக்கவில்லை என்ற தகவல் கசிந்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். கோலமாவு கோகிலா, டாக்டர் திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் பீஸ்ட் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் இயக்குனர் செல்வராகவன் முக்கிய வேடம் ஒன்றில் நடித்துள்ளார். இது வில்லன் வேடம் என சொல்லப்பட்டது.

இதையும் படிங்க.. Bro Daddy review : சந்தோஷமா வாங்க, சிரிச்சிட்டே போங்க.. ப்ரோ டாடி விமர்சனம்!

ஆனால் அவர் வில்லனாக நடிக்கவில்லை அரசியல்வாதியாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.செல்வராகவன் கடைசியாக இயக்கிய படங்கள் வணிகரீதியாக பெரிய வெற்றியைப் பெறாத நிலையில், ராக்கி படத்தை எடுத்த அருண் மாதேஸ்வரனின் சாணிக்காயிதம் படத்தில் செல்வராகவன் பிரதான வேடத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து பீஸ்ட் படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்க.. சுந்தரி சீரியல் கேப்ரில்லாவின் அபார வளர்ச்சிக்கு இதுவும் முக்கியமான காரணம்!

திரவுபதி, ருத்ரதாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி. இன் புதிய திரைப்படத்தில் செல்வராகவன் நாயகனாக நடிக்கிறார். அத்துடன் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படத்தையும் அவர் இயக்கி வருகிறார். அவர் நடிக்கிற வேகத்தைப் பார்த்தால் இயக்கத்தை ஒதுக்கிவைத்து முழுநேர நடிகராகி விடுவார் என அவருக்கு நெருக்கமானவர்களே கூறி வருகின்றனர். பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Sreeja
First published:

Tags: Actor Vijay, Beast, Director selvaragavan, Kollywood