முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Beast: பீஸ்ட் எனது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளது - பூஜா ஹெக்டே!

Beast: பீஸ்ட் எனது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளது - பூஜா ஹெக்டே!

பீஸ்ட் பூஜா ஹெக்டே

பீஸ்ட் பூஜா ஹெக்டே

இன்று பீஸ்ட் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தனது 2-வது தமிழ் படமான பீஸ்ட் படம் தனது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளதாக நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாளை பிரமாண்டமாக வெளியாகிறது பீஸ்ட் திரைப்படம். இதனால் அதிக உற்சாகத்துடன் இருக்கிறார்கள் ரசிகர்கள். படத்துக்கான முன்பதிவு தொடங்கியதுமே, பல இடங்களில் வசூல் சாதனை புரிந்து வருகிறது.

இந்நிலையில் இன்று பீஸ்ட் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. அதில் படத்தின் இயக்குனர் நெல்சன், நாயகி பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

முன்பதிவிலேயே ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை பின்னுக்கு தள்ளிய விஜய்யின் பீஸ்ட்!

அப்போது பேசிய பூஜா ஹெக்டே, “தமிழில் பீஸ்ட் எனது 2-வது படம். நான் எனது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளேன். நெல்சனின் பட பணிகளை வியக்கிறேன். அனிருத் அபரிமிதமாக இசையமைத்து படத்தை உலக அளவில் புகழ் பெற செய்துள்ளார்” என்றார்.

கரூர் மாநகராட்சியில் பீஸ்ட் வெளியாகாது - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தொடர்ந்து பேசிய அபர்ணா தாஸ், “2 மலையாள படங்கள் மட்டுமே நடித்த என்னை படக்குழு எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதே எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. விஜய்யுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சி” என்றார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Thalapathy Vijay, Beast