விஜய்யின் அரபிக் குத்து பாடல் வெளியான 45 நிமிடத்திற்குள் 1 மில்லியன் பார்வைகளைப் பெற்றதோடு 5 மில்லியன் ரியல் டைம் பார்வைகளையும் பெற்றுள்ளது.
நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
தளபதி 65 படம் என்றழைக்கப்பட்டு வந்த பீஸ்ட்படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதையடுத்து பீஸ்ட் படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம்மற்றும் இறுதி நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. தொடர்ந்து பீஸ்ட் படத்தின் வேறு அப்டேட்டுகளுக்காக காத்திருந்தனர் ரசிகர்கள்.
இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து வெளியாகும் என அறிவித்திருந்தனர் படக்குழுவினர். இதன் ப்ரோமோ கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகரும், அரபிக் குத்து பாடலாசிரியரான சிவகார்த்திகேயனும் அந்த ப்ரோமோ வீடியோவில் இடம் பெற்றுள்ளனர். அவர்களுடன் ஃபோனில் பேசியிருந்தார் விஜய். இதைக்கேட்டு உற்சாகமானார்கள் ரசிகர்கள்.
இதையடுத்து ஹலமதி ஹபீபோ எனத்தொடங்கும் அரபிக் குத்து பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிளாக வெளியான இந்தப் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதனை அனிருத்துடன் இணைந்து பாடகி ஜோனிடா காந்தி பாடியுள்ளார்.
Valentine's Day 2022: காதலர்கள் மிஸ் பண்ணக்கூடாத தமிழ் ரொமாண்டிக் திரைப்படங்கள்!
#ArabicKuthu #Beast https://t.co/g5zbxuFjeK
— Vijay (@actorvijay) February 14, 2022
பொதுவாக விஜய் பாடல்கள் என்றாலே, அதில் அவரின் நடனத்தைப் பார்க்க ஒருவித எதிர்பார்ப்பு நிலவும். அதே போல் இந்தப் பாடலும் அந்த ஆர்வத்தை தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் பாடல் வெளியான 45 நிமிடத்திற்குள் 1 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அதோடு 5 மில்லியன் ரியல் டைம் பார்வைகளை இந்த அரபிக் குத்து பாடல் பெற்றுள்ளதாகவும் தயாரிப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
#ArabicKuthu hits 5M+ real time views 🤩
Lots more to come 😎
▶ https://t.co/C7YrT4fz35@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @Siva_Kartikeyan @hegdepooja @jonitamusic @manojdft @Nirmalcuts #Beast #BeastFirstSingle pic.twitter.com/G2FzWLZbfq
— Sun Pictures (@sunpictures) February 14, 2022
Beast Arabic Kuthu: விஜய், பூஜா ஹெக்டேவின் தாறுமாறான ஆட்டத்தில் அரபிக் குத்து பாடல் வீடியோ!
தற்போது வரை 15 லட்சத்துக்கும் மேலான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த ஹலமதி ஹபீபோ பாடலை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Thalapathy Vijay, Actor Vijay, Anirudh, Beast, Nelson dilipkumar, Sun pictures, Youtube