முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / குவைத்தை தொடர்ந்து இன்னொரு நாட்டிலும் பீஸ்ட் படத்துக்கு தடை?

குவைத்தை தொடர்ந்து இன்னொரு நாட்டிலும் பீஸ்ட் படத்துக்கு தடை?

பீஸ்ட்

பீஸ்ட்

குவைத் நாட்டில் பீஸ்ட் திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த தடை மலேசியாவிலும் எதிரொலிக்குமோ என்ற அச்சமும் தற்போது திரைத்துறையில் நிலவி வருகிறது.

  • Last Updated :

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் குவைத் நாட்டில் வெளியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணி குறித்தும் இது போல பிற நாடுகளில் தடை செய்யப்படும் தமிழ் திரைப்படங்கள் குறித்தும் இங்கே பார்ப்போம்.

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்திற்கு, தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் தமிழர்கள் வசிக்கும் பிற நாடுகளிலும் எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், இந்த திரைப்படத்திற்கு குவைத் நாடு திடீரென தடை விதித்துள்ளது.

படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது. ஏற்கனவே இது போல சமீபத்தில் வெளியான குரூப் மற்றும் எப்ஐஆர் ஆகிய திரைப்படங்களுக்கும் குவைத் நாடு தடை விதித்திருந்தது. துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான குரூப் திரைப்படத்தில் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளி குருப்பிற்கு, குவைத் நாடு தஞ்சம் அளிப்பது போல காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் இந்த படத்திற்கு அந்நாடு தடை விதித்தது.

இதேபோல விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான FIR திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகள் இடம் பெற்றதால், குவைத் நாடு அந்த திரைப்படத்திற்கு தடை விதித்தது. இதே காரணத்திற்காக கமல்ஹாசன் நடிப்பில் உருவான விஸ்வரூபம் திரைப்படத்தை மலேசியா தடை செய்ததும் குறிப்பிடத்தக்கது. மலேசியாவில் முதல் நாள் வெளியான விஸ்வரூபம் திரைப்படம் அடுத்த நாளிலிருந்து உடனடியாக நிறுத்தப்பட்டது.

Beast: எப்போதும் விஜய் சாரின் தீவிர ரசிகன் நான் - பாலிவுட் நடிகர் வருண் தவான்!

மேலும் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்ட ரஜினியின் கபாலி திரைப்படமும், மலேசியா நாட்டை வன்முறையாளர்கள் நிரம்பிய நாடாக காட்டுவதாகவும், போதைப்பொருள், கடத்தல், வன்முறை உள்ளிட்ட காட்சிகள் அதிகமாக இருப்பதாக கூறி முப்பதிற்கும் மேற்பட்ட சென்சார் வெட்டுக்கள் போட்டு படத்தை மொத்தமாக குதறித் தள்ளியது.

பீஸ்ட் ட்ரைலரில் இடம்பெறும் இந்த வில்லன் யார் தெரியுமா?

குவைத் நாட்டில் பீஸ்ட் திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த தடை மலேசியாவிலும் எதிரொலிக்குமோ என்ற அச்சமும் தற்போது திரைத்துறையில் நிலவி வருகிறது. குவைத்து நாடு தெரிவித்த அதே காரணத்தை முன்வைத்து, மலேசியாவில் படம் தடை செய்யப்பட்டால், இந்த படத்திற்கு அது பெரும் பின்னடைவாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட ஏரியாக்களுக்கு நிகராக வர்த்தகம் நிகழ்த்தும் பகுதிகள் என்பதால், மலேசியா என்ன முடிவு எடுக்கும் என்பதை எதிர்நோக்கி திரைத்துறையினர் அச்சத்தோடு காத்துக் கொண்டுள்ளனர்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Actor Vijay, Beast, Thalapathy vijay