Home /News /entertainment /

நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி ரூ.200 கோடி வசூலை கடந்த பீஸ்ட்?

நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி ரூ.200 கோடி வசூலை கடந்த பீஸ்ட்?

விஜய்

விஜய்

தமிழ்நாட்டில் கேஜிஎஃப் 2 படத்தின் மீது எழும் டிமாண்டை தாண்டி, வரும் நாட்களில் பீஸ்ட் எவ்வாறு தனது இடத்தைப் பிடிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் 200 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நடிகர் விஜய்யின் சமீபத்திய திரைப்படமான பீஸ்ட் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய விவாதமாக மாறியுள்ளது. படத்தின் மீதான நெகட்டிவ் ரெவ்யூ மற்றும் யாஷின் கேஜிஎஃப் 2 படத்தின் பலத்த போட்டி ஆகியவற்றின் காரணமாக, பீஸ்ட் தோல்வியடைந்ததாக ஒரு பிரிவினர் கூறும் நிலையில், மற்றொரு பிரிவினர் திரைப்படத்தின் வணிக வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

    ட்விட்டரில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள், பீஸ்ட் படத்திற்கு மோசமான விமர்சனங்கள் இருந்தபோதிலும், படம் ஹவுஸ் ஃபுல்லாக ஓடுவதாகவும், ஃபேமிலி ஆடியன்ஸ் விஜய்யை மிஸ் செய்யவில்லை என்றும் அப்டேட்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

    பீஸ்ட் வெளியான மூன்று நாட்களுக்குள் இந்தியா முழுவதும் அதன் டிக்கெட் விற்பனை ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. முக்கிய அறிக்கையின்படி, பீஸ்ட் படம் முதல் வார இறுதியில் உலகளவில் 26 மில்லியன் டாலர் வசூலித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    குக் வித் கோமாளி மணிமேகலையின் காஸ்ட்லி பைக் திருட்டு... கஷ்டப்பட்டு சம்பாதித்து வாக்கின பைக் என உருக்கம்

    கேரளா மற்றும் கர்நாடகா உட்பட மற்ற அண்டை மாநிலங்களில் பீஸ்டின் திரையரங்குகள் எண்ணிக்கை கேஜிஎஃப் 2-வால் பாதிக்கப்பட்டன. நீண்ட வார இறுதியில் விமர்சகர்களின் மோசமான மதிப்பீடுகளையும் தாண்டி பீஸ்ட் வெற்றி பெற்றது என உறுதியாக சொல்லலாம்.

    மோடியை புகழ்ந்த இளையராஜா... திராவிடன் எனப் பெருமைப்படும் யுவன்... எதிரெதிர் துருவத்தில் அப்பா-மகன்?

    தமிழ்நாட்டில் கேஜிஎஃப் 2 படத்தின் மீது எழும் டிமாண்டை தாண்டி, வரும் நாட்களில் பீஸ்ட் எவ்வாறு தனது இடத்தைப் பிடிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நெல்சன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் இந்திய உளவாளியாக நடித்திருந்தார். பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்திருந்த இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay, Beast

    அடுத்த செய்தி