முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Beast: முன்பதிவிலேயே ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை பின்னுக்கு தள்ளிய விஜய்யின் பீஸ்ட்!

Beast: முன்பதிவிலேயே ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை பின்னுக்கு தள்ளிய விஜய்யின் பீஸ்ட்!

பீஸ்ட் - ரஜினிகாந்த்

பீஸ்ட் - ரஜினிகாந்த்

ரஜினியின் கோட்டை எனக் கருதப்படும் பகுதியில் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்துள்ளது பீஸ்ட்.

  • Last Updated :

ரஜினிகாந்தின் கோட்டை எனக் கருதப்பட்ட இடத்தில் விஜய்யின் பீஸ்ட் வசூல் சாதனை புரிந்துள்ளது.

நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

காதலர் தினத்தை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து’ லிரிக் வீடியோ வெளியானது. அதன் ப்ரோமோவில் இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகரும், அரபிக் குத்து பாடலாசிரியரான சிவகார்த்திகேயனும் இடம் பெற்றிருந்தனர். அவர்களுடன் ஃபோனில் பேசியிருந்தார் விஜய். இதைக்கேட்டு உற்சாகமானார்கள் ரசிகர்கள்.

திரை தீ பிடிக்கும்... ஒருத்தன் வந்தா படை நடுங்கும்... பீஸ்ட் 3-வது பாடல்!

தொடர்ந்து ஜாலியோ ஜிம்கானா, பீஸ்ட் மோடு ஆகியப் பாடல்களும் வெளியாகின. இதையடுத்து நாளை பிரமாண்டமாக வெளியாகிறது பீஸ்ட் திரைப்படம். இதனால் அதிக உற்சாகத்துடன் இருக்கிறார்கள் ரசிகர்கள். படத்துக்கான முன்பதிவு தொடங்கியதுமே, பல இடங்களில் வசூல் சாதனை புரிந்து வருகிறது.

கணவரை பிரிந்த பிறகு, இந்த விஷயங்களில் கவனம் செலுத்தும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...

இந்நிலையில் ரஜினியின் கோட்டை எனக் கருதப்படும் பகுதியில் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்துள்ளது பீஸ்ட். அமெரிக்க பாக்ஸ் ஆபிஸ் எப்போதுமே தெலுங்கு ஹீரோக்கள் வசம் தான் இருக்கும். அவர்களுக்கு அடுத்தப்படியாக அங்கு ரஜினிகாந்திற்கு தான் நல்ல மார்க்கெட் உள்ளது. அதனை பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் தன் வசப்படுத்தியுள்ளார் விஜய். அங்கு டிக்கெட் முன்பதிவில் 4.3 லட்சம் டாலர் வசூல் செய்துள்ள பீஸ்ட் திரைப்படம், அண்ணாத்த முன்பதிவு வசூலை முந்தியுள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Thalapathy Vijay, Rajinikanth