Home /News /entertainment /

ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஜய்யின் பீஸ்ட் அப்டேட்!

ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஜய்யின் பீஸ்ட் அப்டேட்!

பீஸ்ட்

பீஸ்ட்

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில், ஏப்ரலில் பீஸ்ட் திரைப்படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

    நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், படத்தைப் பற்றிய அட்டகாச அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

    நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

    தளபதி 65 படம் என்றழைக்கப்பட்டு வந்த பீஸ்ட் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. அதோடு கடந்த மாதம், பீஸ்ட் படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட படத்தை ட்விட்டரில் வெளியிட்டார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். இசைக்கருவிகளுடன் நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் இருந்த அந்தப் படம் ரசிகர்களை ’வாவ்’ சொல்ல வைத்தது. தவிர, பீஸ்ட் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் விஜய்யும், நெல்சனும் எடுத்துக் கொண்ட படத்தை ட்விட்டரில் பகிர்ந்தது சன் பிக்சர்ஸ். தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகும் என காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.



    இந்நிலையில் தற்போது பீஸ்ட் படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால்? பீஸ்ட் படத்தின் மீதமிருந்த பேட்ச் ஒர்க் ஷூட்டிங் ஜெய்பூரில் நடந்து முடிந்ததாகவும், இதையடுத்து இப்படத்தின் அனைத்து ஷூட்டிங்கும் முடிந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில், ஏப்ரலில் பீஸ்ட் திரைப்படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Arun Vijay

    அடுத்த செய்தி