Home /News /entertainment /

விஜய்யின் பீஸ்ட் ஆடியோ வெளியீட்டு விழா தேதி இதுதான்... உற்சாகத்தில் ரசிகர்கள்!

விஜய்யின் பீஸ்ட் ஆடியோ வெளியீட்டு விழா தேதி இதுதான்... உற்சாகத்தில் ரசிகர்கள்!

அரபிக் குத்து

அரபிக் குத்து

காதலர் தினத்தை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து’ பாடல் வெளியானது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    விஜய் நடித்திருக்கும் பீஸ்ட் படத்தின் பாடல் வெளியீட்டு விழா வரும் 20-ம் தேதி வெளியாகும் என செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

    நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

    விபத்தை ஏற்படுத்தி விட்டு எஸ்கேப் ஆன பிக் பாஸ் ஆர்த்தியின் கணவர் கணேஷ்கர் - போலீஸ் வலைவீச்சு

    பீஸ்ட் படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் இறுதி நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து காதலர் தினத்தை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து’ பாடல் வெளியானது. ஹலமதி ஹபீபோ என்ற அந்தப் பாடலை சிவகார்த்திகேயன் எழுத, அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர்.

    தனுஷுடன் ஏற்பட்ட பிரிவு... செல்வராகவன் படத்தைப் பகிர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன விஷயம்!

    இதையடுத்து பீஸ்ட் படத்தின் முழு பாடல்களையும் கேட்க மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். தற்போது அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியிருக்கிறது. அதாவது வரும் 20-ம் தேதி பீஸ்ட் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Vijay, Beast

    அடுத்த செய்தி