ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நயன்தாரா கொடுத்த வாய்ப்பால் ஹீரோயினாகும் பீஸ்ட் அரபிக் குத்து பாடகி ஜோனிடா காந்தி!

நயன்தாரா கொடுத்த வாய்ப்பால் ஹீரோயினாகும் பீஸ்ட் அரபிக் குத்து பாடகி ஜோனிடா காந்தி!

ஜோனிடா காந்தி

ஜோனிடா காந்தி

கனடாவில் வளர்ந்த பஞ்சாபி பெண்ணான இவரை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் சினிமாவுக்கு பாடகியாக அறிமுகப்படுத்தினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  டாக்டர் படத்தின் செல்லம்மா செல்லம்மா, பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து உள்ளிட்ட பாடல்களை பாடியுள்ள பாடகி ஜோனிடா காந்தி சினிமாவில் ஹீரோடினாகவும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். நடிகை நயன்தாரா தான் அவருக்கு இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறார்.

  தமிழ் சினிமாவின் முக்கிய ஜோடிகளான நயன்தாரா - விக்னேஷ் சிவன் மற்ற ஜோடிகளுக்கும் ரிலேஷன்ஷிப் இலக்குகளை நிர்ணயித்து வருகிறார்கள். தாங்கள் காதலில் விழ காரணமாக இருந்த நானும் ரவுடி தான் படத்தின் நினைவாக ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார்கள்.

  தற்போது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம், ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, 'கூழாங்கல்', ‘வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்’ மற்றும் ’ஊர்க்குருவி’ ஆகியப் படங்களை தயாரித்திருக்கிறது. இதில் வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் படத்தை அறிமுக இயக்குநர் விநாயக் இயக்கியுள்ளார். இதில் சூரரைப்போற்று திரைப்படத்தில் சூர்யாவுக்கு நண்பராக நடித்த கேகே என்கிற கிருஷ்ணகுமார் ஹீரோவாக நடிக்கிறார்.

  இதையும் படிங்க - ஆமாம் நான் காதலிக்கிறேன்... மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

  அந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் ஜோனிடா காந்தி. கனடாவில் வளர்ந்த பஞ்சாபி பெண்ணான இவரை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் சினிமாவுக்கு பாடகியாக அறிமுகப்படுத்தினார். 2016-ல் சூர்யா நடிப்பில் வெளியான 24 படத்தில் ’மெய் நிகரா மெல்லிடையே’ என்ற பாடல் தான் ஜோனிடாவுக்கு முதல் தமிழ் பாடல். அதன் பிறகு பல பாடல்களை பாடியிருக்கிறார்.

  வலிமை முதல் காட்சி ரத்து - அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்

  குறிப்பாக அனிருத் இசையில், டாக்டர் படத்தில் ‘செல்லம்மா செல்லம்மா’ என்ற பாடலும், பீஸ்ட் படத்தில் ‘அரபிக் குத்து’ பாடலும் பட்டி தொட்டியெங்கும் ஒலித்து தெறி ஹிட்டாகின. தற்போது நடிகையாகவும் புதிய அவதாரம் எடுக்கும் ஜோனிடா காந்தி மீது எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Tamil Cinema