Home /News /entertainment /

மகேஷ்பாபு பாடல் சாதனையை முறியடிக்குமா விஜய்யின் பீஸ்ட் அரபிக் குத்து?

மகேஷ்பாபு பாடல் சாதனையை முறியடிக்குமா விஜய்யின் பீஸ்ட் அரபிக் குத்து?

விஜய் - மகேஷ்பாபு

விஜய் - மகேஷ்பாபு

Arabic Kuthu: இன்று வெளியாகியிருக்கும் விஜய்யின் அரபிக் குத்து பாடலை ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் கேட்டு வருகின்றனர்.

விஜய்யின் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் இப்போது வெளியாகியுள்ளது. அரபிக் குத்து என்ற பெயரில் இதனை இரு தினங்கள் முன்னர் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரும், இசையமைப்பாளர் அனிருத்தும், நடிகர் சிவகார்த்திகேயனும் சேர்ந்து அறிமுகப்படுத்தியிருந்தனர்.

அதென்ன அரபிக் குத்து என்று அறிய ரசிகர்கள் பெரும் ஆவலாக காத்திருந்தனர். இந்நிலையில் இன்று மாலை ஆறு மணிக்கு அந்தப் பாடலை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. ரசிகர்கள் ஆர்வமுடன் பாடலை கேட்டு வருகின்றனர்.  இந்தப் பாடல் மகேஷ் பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா படப் பாடலின் சாதனையை முறியடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மகேஷ் பாபு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சர்க்காரு வாரி பாட்டா.  மே 12-ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது. மகேஷ்பாபுவுடன் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பரசுராம் படத்தை இயக்கியுள்ளார். தமன் இசையில் உருவாகியிருக்கும் கலாவதி என்ற பாடல் வெளியான 24 மணி நேரத்திற்குள் 16 மில்லியன் பார்வைகளை யூடியூபில் பெற்றுள்ளது. அதாவது 1.6 கோடி பேர் இதை பார்த்துள்ளனர். அதேபோல் 8 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளையும் இப்பாடல் பெற்றுள்ளது. தென்னிந்திய சினிமா வரலாற்றில் 24 மணி நேரத்தில் அதிகம் பேர் பார்த்த பாடல் என்ற பெருமை இந்த கலாவதி பாடலுக்கு கிடைத்துள்ளது. அதேபோல் அதிக லைக்குகள் வாங்கிய பாடல் என்ற சாதனையும் படைத்துள்ளது.

Valentine’s Day 2022: காதலில் திளைத்து பின் பிரிந்து போன காதல் ஜோடிகள்!



Beast Arabic Kuthu: விஜய், பூஜா ஹெக்டேவின் தாறுமாறான ஆட்டத்தில் அரபிக் குத்து பாடல் வீடியோ!

இன்று வெளியாகியிருக்கும் விஜய்யின் அரபிக் குத்து பாடலை ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் கேட்டு வருகின்றனர். தமிழகத்தை தாண்டியும் அரபி குத்தை கேட்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். அதனால் மகேஷ் பாபு படப் பாடலின் சாதனையை இது முறியடிக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். நாளை மாலை 6 மணிக்கு மகேஷ் பாபு படப் பாடலின் சாதனையை  விஜய்யின் அரபி குத்து  முறியடித்ததா இல்லையா என்பது தெரிந்துவிடும்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor Thalapathy Vijay, Actor Vijay, Mahesh babu

அடுத்த செய்தி