ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Thalapathy Vijay: விடுமுறை ஓவர்... வாரிசு செட்டுக்கு திரும்பிய விஜய்!

Thalapathy Vijay: விடுமுறை ஓவர்... வாரிசு செட்டுக்கு திரும்பிய விஜய்!

விஜய்

விஜய்

இப்படம் பாக்ஸ் ஆபிஸில் அஜித்தின் 'துணிவு' படத்துடன் மோதவுள்ளதால், இருதரப்பு ரசிகர்களும் பொங்கலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விஜய், வாரிசு படப்பிடிப்பில் கலந்துக் கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  விஜய்யின் அடுத்தப் படமான ‘வாரிசு’ படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இதன் படப்பிடிப்பை முடித்துவிட்டு, விஜய் சமீபத்தில் விடுமுறைக்கு சென்றிருந்தார். அப்போது கடந்த வாரம் அமெரிக்காவில் ரசிகர் ஒருவருடன் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், படத்துக்காக சில பேட்ச்வொர்க் செய்யக் கிளம்பினார் இயக்குநர். கர்நாடகாவின் பெல்லாரியில் மீண்டும் குழுவுடன் இணைந்தார் வம்ஷி. அதோடு ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்படவிருக்கிறது. இந்தப் படப்பிடிப்பில் விஜய் கலந்துக் கொள்கிறார்.

  இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் சீராக நடந்து வருகிறது. மேலும் படத்திற்கு இதுவரை இல்லாத சில விளம்பரங்களை நடத்த தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். தமன் இசையமைத்த 'ரஞ்சிதமே' என்ற முதல் சிங்கிள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. தளபதி விஜய் மற்றும் எம்.எம் மானசி பாடிய இப்பாடல் இணையத்தை கலக்கி வருகிறது. இப்படத்தின் அடுத்த சிங்கிள் இந்த வாரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இசையமைப்பாளர் தமனின் பிறந்தநாளான நவம்பர் 16-ம் தேதி இரண்டாவது பாடல் வரலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

  தங்கையின் பாசாங்கு இல்லாத நடிப்பு... குஷி கபூரை புகழ்ந்த ஜான்வி கபூர்!

  'வாரிசு' படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படம் ரிலீஸ்க்கு முந்தைய வியாபாரத்தில் தமிழ் படத்துக்கான சாதனையை ஏற்கனவே செய்துவிட்டது. வாரிசு படத்தில் முதன்முறையாக விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, பிரகாஷ் ராஜ், சரத்குமார், குஷ்பு, மீனா, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் அஜித்தின் 'துணிவு' படத்துடன் மோதவுள்ளதால், இருதரப்பு ரசிகர்களும் பொங்கலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Thalapathy Vijay