முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Arabic Kuthu: விஜய்யின் அரபிக் குத்து பாடலை அச்சு அசலாக மறு உருவாக்கம் செய்த ரசிகர்கள் - வைரல் வீடியோ!

Arabic Kuthu: விஜய்யின் அரபிக் குத்து பாடலை அச்சு அசலாக மறு உருவாக்கம் செய்த ரசிகர்கள் - வைரல் வீடியோ!

அரபிக் குத்து பாடல்

அரபிக் குத்து பாடல்

அரபிக் குத்து பாடலை மறு உருவாக்கம் செய்து விஜய்யின் இளம் ரசிகர்கள் சிலர் அதனை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

  • 1-MIN READ
  • Last Updated :

விஜய்யின் அரபிக் குத்து பாடலை அவரின் இளம் ரசிகர்கள் மறு உருவாக்கம் செய்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது. 

நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்தார். அந்தப் படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்த பீஸ்ட் படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்தது.

பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா ஆகியப் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக அரபிக் குத்து பாடலுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் நடனமாடி அதனை ரீல்ஸ் வீடியோவாக இன்ஸ்டகிராமில் வெளியிட்டனர். இதையடுத்து அரபிக் குத்து பாடலின் லிரிக் வீடியோ யூ-ட்யூபில் 442 மில்லியன் பார்வைகளையும், பாடல் வீடியோ 133 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது.

ஹீரோயின் போல ஜொலிக்கும் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் அரபிக் குத்து பாடலை மறு உருவாக்கம் செய்து விஜய்யின் இளம் ரசிகர்கள் சிலர் அதனை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். உடைகள், செட், ப்ரபர்ட்டிகள், பின்னால் ஆடும் நடனக் கலைஞர்கள் என அனைத்தும் அச்சு அசலாக ஒரிஜினல் போலவே உள்ளது. விஜய் - பூஜா ஹெக்டே ஆகியோரைப் போன்ற நடன அசைவுகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

ஆஸ்கர் அழைப்பை ஏற்ற சூர்யா... பொறுப்புணர்வை உணர்த்துவதாக முதல்வருக்கு பதில்!

அதோடு, ஒரிஜினல் வீடியோவில் நாம் பார்க்கும் பிரமாண்டத்திற்கு சற்றும் குறைவில்லாத இந்த மறு உருவாக்க வீடியோவை பாராட்டி ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

First published:

Tags: Beast, Thalapathy vijay