ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Arabic Kuthu: யூ-ட்யூபில் 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த விஜய்யின் அரபிக் குத்து பாடல்!

Arabic Kuthu: யூ-ட்யூபில் 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த விஜய்யின் அரபிக் குத்து பாடல்!

விஜய்

விஜய்

பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா ஆகியப் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் யூ-ட்யூபில் 300 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்தார். அந்தப் படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்த பீஸ்ட் படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்தது.

பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா ஆகியப் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக அரபிக் குத்து பாடலுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் நடனமாடி அதனை ரீல்ஸ் வீடியோவாக இன்ஸ்டகிராமில் வெளியிட்டனர். இந்நிலையில் தற்போது அந்தப் பாடல் யூ-ட்யூபில் 300 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

' isDesktop="true" id="818942" youtubeid="KUN5Uf9mObQ" category="cinema">

சினேகாவின் நோ மேக்கப் படங்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'அரபிக் குத்து' பாடல் 'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிள் டிராக்காக வெளியிடப்பட்டது. அந்தப் பாடல் வெளியானதுமே வைரல் ஹிட் ஆனது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்தப் பாடல் வரிகளை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதினார், ஜானி நடனம் அமைத்தார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 'பீஸ்ட்' திரையரங்குகளில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Thalapathy vijay