• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சந்திப்பின் போது சூர்யாவிடம் விஜய் என்ன பேசினார் தெரியுமா?

சந்திப்பின் போது சூர்யாவிடம் விஜய் என்ன பேசினார் தெரியுமா?

விஜய் - சூர்யா

விஜய் - சூர்யா

விஜய் - சூர்யா இருவரும் இணைந்து மதிய உணவு சாப்பிட்டிருக்கிறார்கள். இது தனிப்பட்ட சந்திப்பு என்பதால் புகைப்படங்கள் எடுக்கப்படவில்லை.

  • Share this:
    நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவின் சமீபத்திய சந்திப்பு தான் தற்போதைய ஹாட் டாபிக்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய்யும், சூர்யாவும் நெருங்கிய நண்பர்கள். விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் செல்வராகவன், யோகி பாபு, பூஹா ஹெக்டே, விடிவி கணேஷ், ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், அன்குர் அஜித் விகால் உள்ளிட்டோர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது பெருங்குடியில் உள்ள சன் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. அதே ஸ்டூடியோவில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பும் நடைபெறுகிறது. படப்பிடிப்பு இடைவேளையில் விஜய்யும் சூர்யாவும் சந்தித்துள்ளனர். அப்போது ஜெய் பீம் திரைப்படம் குறித்து சூர்யாவிடம் விஜய் பேசியதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் இருவரும் இணைந்து மதிய உணவு சாப்பிட்டிருக்கிறார்கள். இது தனிப்பட்ட சந்திப்பு என்பதால் புகைப்படங்கள் எடுக்கப்படவில்லை.

    இதற்கிடையே விஜய் - சூர்யா சந்திப்பு இரு நடிகர்களின் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: