ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு செட்டில் விஜய் ஜாலி ரைடு... வீடியோவைப் பகிர்ந்த ஷாம்!

வாரிசு செட்டில் விஜய் ஜாலி ரைடு... வீடியோவைப் பகிர்ந்த ஷாம்!

ஷாம் - விஜய்

ஷாம் - விஜய்

நடிகர் ஷாம் இதை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் 'ரூ. 210 கோடி 7 நாட்கள்' என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய்யுடன் ஜாலி ரைடு சென்ற வீடியோவை பகிர்ந்துள்ளார் நடிகர் ஷாம்.

தளபதி விஜய்யின் வாரிசு படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்து வருகிறது. இதற்கிடையில், நடிகர் ஷாம், ஹைதராபாத் செட்டில் விஜய்யுடன் மின்சார வாகனம் ஒன்றில் ஜாலியாக பயணித்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் நடிகர் ஷாம் பயணியாகவும், விஜய் டிரைவராகவும் இருந்தார். ஜாலியாக வண்டியை ஓட்டிய விஜய், சிரித்த முகத்துடன் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டர். நடிகர் ஷாம் இதை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் 'ரூ. 210 கோடி 7 நாட்கள்' என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார்.
 
View this post on Instagram

 

A post shared by SHAAM (@actor_shaam)வம்ஷி பைடிப்பள்ளி எழுதி இயக்கிய குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் தான் வாரிசு. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு இதனை தயாரித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, ஜெயசுதா, யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்துக்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார். படத்தில் விஜய் பாடிய ரஞ்சிதமே உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Thalapathy Vijay