Home /News /entertainment /

Varisu: இணையத்தில் லீக்கான விஜய் - ராஷ்மிகாவின் ரொமாண்டிக் படம்

Varisu: இணையத்தில் லீக்கான விஜய் - ராஷ்மிகாவின் ரொமாண்டிக் படம்

வாரிசு

வாரிசு

'வாரிசு' படத்தின் மொத்த படப்பிடிப்பும் செப்டம்பர் இறுதிக்குள் முடிவடையும் என்றும், படம் 2023 பொங்கலுக்கு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    வாரிசு படத்தில் இடம்பெற்றுள்ள விஜய் - ராஷ்மிகா மந்தனாவின் ரொமாண்டிக் படம் இணையத்தில் லீக்காகியுள்ளது.

    தளபதி விஜய் நடித்து வரும் வாரிசு படத்தை வம்ஷி பைடிபள்ளி இயக்கி வருகிறார். தற்போது படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் ஹைதராபாத் ஃபிலிம் சிட்டியில் நடத்தி வருகின்றனர் படக்குழுவினர். துரதிர்ஷ்டவசமாக படப்பிடிப்பு தளத்தைச் சுற்றி பல கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், அங்கிருந்து பல படங்கள் இணையத்தில் கசிந்து படத்தின் தோற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன. தற்போது விஜய் மற்றும் ராஷ்மிகா ரொமாண்டிக்காக இருக்கும் படம் வாரிசு செட்டில் இருந்து கசிந்துள்ளது. இருவரும் நெருக்கமான காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

    இதுவரை 'வாரிசு' செட்டில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் கசிந்து, விஜய் படங்களிலேயே ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அதிகம் கசிந்த புகைப்படங்கள் கொண்ட படமாக இப்படம் மாறியுள்ளது. வழக்கமாக படங்கள் கசிந்து வருவதால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், தயாரிப்பாளர்களின் கவனக்குறைவே இதற்குக் காரணம் என குற்றம் சாட்டுகின்றனர். 'வாரிசு' படத்தின் மொத்த படப்பிடிப்பும் செப்டம்பர் இறுதிக்குள் முடிவடையும் என்றும், படம் 2023 பொங்கலுக்கு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    பிசாசு 2 செகண்ட் சிங்கிள் வெளியீட்டு தேதி அறிவிப்பு



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    'வாரிசு' ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன். விரைவில் இதன் முதல் சிங்கிள் டிராக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay, Actress Rashmika Mandanna

    அடுத்த செய்தி