• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Thalapathy 66: தளபதி 66-ல் விஜய்யுடன் இணையும் பிரபுதேவா?

Thalapathy 66: தளபதி 66-ல் விஜய்யுடன் இணையும் பிரபுதேவா?

விஜய் - பிரபுதேவா

விஜய் - பிரபுதேவா

'பீஸ்ட்' நடித்துக் கொண்டிருக்கும் விஜய், அதை முடித்து விட்டு, வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தமிழ் / தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

  • Share this:
    நடிகர் விஜய் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவுடன் இணையவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பிரபுதேவாவின் இயக்கத்தில் நடிகர் விஜய் முதன் முதலாக போக்கிரி படத்தில் நடித்திருந்தார். இப்படம் 2007-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வெற்றி பெற்றது. படத்தில் பாடல்களும், விஜய்யின் நடன அசைவுகளும் பெரிதாக பேசப்பட்டன. இது தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் வெற்றி படங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.

    சில வருடங்களுக்குப் பிறகு விஜய்யும் பிரபுதேவாவும் மீண்டும் இணைந்து 'வில்லு' படத்தில் பணியார்றினர். ஆனால் அது துரதிர்ஷ்டவசமாக பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது. பின்னர் பிரபுதேவா அக்‌ஷய் குமாரை வைத்து இயக்கிய 'ரவுடி ரத்தோர்' படத்தில் "சிந்தா தாதா சிந்தா சிந்தா" என்ற பாடலில் சிறப்புத் தோற்றத்தில் ஆடினார் விஜய்.

    தற்போது 'பீஸ்ட்' நடித்துக் கொண்டிருக்கும் விஜய், அதை முடித்து விட்டு, வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தமிழ் / தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கவிருக்கிறார். தில் ராஜு தயாரிக்கும் இந்தப் படம் 'தளபதி 66' எனக் குறிப்பிடப்படுகிறது.

    தெலுங்கில் அறிமுகமாகும் விஜய், அங்கு தனது அறிமுகம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதால், படத்தின் 2 பாடல்களை கொரியோகிராப் செய்யுமாறு பிரபுதேவாவிடம் கேட்டுக் கொண்டுள்ளாராம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: