Thalapathy Vijay: தளபதி விஜய்யின் அமெரிக்க ரசிகருக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்!

Thalapathy Vijay: தளபதி விஜய்யின் அமெரிக்க ரசிகருக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்!

நடிகர் விஜய்

நடிகர் விஜய்யின் தளபதி 65 படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து வருகிறது. அங்குள்ள ரசிகர் ஒருவருக்கு ஓர் அதிர்ஷ்ட நிகழ்வு நடந்துள்ளது.

  • Share this:
    நடிகர் விஜய்யின் தளபதி 65 படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து வருகிறது. அங்குள்ள ரசிகர் ஒருவருக்கு ஓர் அதிர்ஷ்ட நிகழ்வு நடந்துள்ளது.

    தளபதி விஜய் கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியாவில் தனது புதிய திரைப்படமான 'தளபதி 65' படப்பிடிப்பில் மும்முரமாக உள்ளார். படத்தின் முக்கியக் காட்சிகள இங்கு படமாக்கப்படுவதால், குறைந்தது பதினைந்து நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தைப் போலவே, நாட்டின் பிற பகுதிகளிலும், மற்ற நாடுகளிலும் பெரும் ரசிகர்களைப் பெற்றுள்ளார் விஜய். மேலும் அந்த பகுதியைச் சுற்றியுள்ளவர்கள் அவரைப் பார்க்க ஆர்வமாக உள்ளனர் என்பதை உங்களுக்கு சொல்லி தெரியவில்லை.

    இந்நிலையில் ஜார்ஜியாவைச் சேர்ந்த ஒரு அதிர்ஷ்ட ரசிகர், தளபதி விஜய்யிடமிருந்து தான் பெற்ற ஆட்டோகிராப்பை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். உடனே இந்தப்படம் வைரலாகிவிட்டது. வரும் நாட்களிலும் இதைவிட அதிகமாக எதிர்பார்க்கலாம்.



    'தலபதி 65' படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ளார், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா கேமராவை கையாளுகிறார். இப்படத்தில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க, அபர்ணா தாஸ் மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: