Home /News /entertainment /

விஜய் 66 படத்தின் அப்டேட்டுகளைக் கொடுத்த தயாரிப்பாளர் தில் ராஜு... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

விஜய் 66 படத்தின் அப்டேட்டுகளைக் கொடுத்த தயாரிப்பாளர் தில் ராஜு... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தமிழில் கார்த்தி, நாகார்ஜுனா நடிப்பில் வெளிவந்த தோழா படத்தை இயக்கிய வம்சிதான், விஜய் நடிக்கும் 66வது படத்தை இயக்கவுள்ளார். இதனை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார்.

    விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் சில அப்டேட்டுகளை தயாரிப்பாளர் தில் ராஜு ஒரு நேர்காணலில் அளித்துள்ளார். இந்த தகவல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள.

    மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங்கை கடந்த டிசம்பர் மாதத்தில் முடித்துக் கொண்ட விஜய் அடுத்ததாக தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜுவின் படத்தில் நடிக்கவுள்ளார்.

    இதையும் படிங்க : தாயார் ஷோபாவுடன் விஜய்... சமூக வலைதளங்களில் வைரலாகும் லேட்டஸ்ட் க்ளிக்

    இதனை தமிழில் நாகார்ஜுனா, கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கிய வம்சி இயக்கவுள்ளார். மற்ற விஜய் படங்களில் இருந்து மாறுபட்டு, இந்த திரைப்படம் உருவாகவுள்ளது.

    இந்தப் படம் தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெலுங்கு சேனலில் நேர்காணல் ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

    இயக்குனர் வம்சி மிக அழகான கதை ஒன்றை என்னிடம் கொண்டு வந்தார். அதை நான் கேட்டபோது எனக்கு மிகவும் பிடித்து விட்டது. விஜய்யும் இந்த கதையை கேட்டார். கேட்ட பின்னர் கடந்த 20 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு கதையை நான் கேட்டதில்லை என்று கூறி பாராட்டினார்.

    ஒரு மிகப்பெரும் நட்சத்திரமே இப்படி சொல்லும்போது, எங்களுக்கு கதை மீதான நம்பிக்கை அதிகரித்தது. விஜய் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்கும். கொரோனா காரணமாக எந்த தாமதமும் ஏற்படாமல் இருந்தால், படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாகும். ஒருவேளை சில காரணங்களால் தீபாவளிக்கு படம் ரிலீசாக தவறினார், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் ரிலீஸ் செய்யப்படும்.
    இவ்வாறு தயாரிப்பாளர் தில் ராஜு கூறியுள்ளார்.

    தமிழில் கார்த்தி, நாகார்ஜுனா நடிப்பில் வெளிவந்த தோழா படத்தை இயக்கிய வம்சிதான், விஜய் நடிக்கும் 66வது படத்தை இயக்கவுள்ளார். இதனை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு கடந்த செப்டம்பர் 26-ம்தேதி வெளியானது.

    இதையும் படிங்க : நொய்டா சர்வதேச பட விழாவில் விருதுகளை வென்று குவித்த ஜெய் பீம்!
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vijay

    அடுத்த செய்தி