முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'தளபதி 67 ப்ரோமோ.. 10 மடங்கு சூப்பரா இருக்கு' - எதிர்பார்ப்பை எகிற வைத்த சந்தீப் கிஷன்.. உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!

'தளபதி 67 ப்ரோமோ.. 10 மடங்கு சூப்பரா இருக்கு' - எதிர்பார்ப்பை எகிற வைத்த சந்தீப் கிஷன்.. உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!

தளபதி 67

தளபதி 67

மாநகரம் படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முக்கியமாக கதாப்பாத்திரமாக சந்தீப் கிஷன் நடித்திருந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நான் நினைச்சதை விட 10 மடங்கு ப்ரோமோ நல்லா இருக்கு என தளபதி 67 படத்தின் ப்ரோமோவை பார்த்த நடிகர் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் துவங்கியது. இந்தப் படத்தில் விஜய்யுடன் திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படமும் லோகேஷின் எல்சியூ அடிப்படையில் உருவாவதாகக் கூறப்படும் நிலையில் 'கைதி' கார்த்தி , ரோலெக்ஸ் சூர்யா, 'விக்ரம்' கமல் உள்ளிட்ட கதாப்பாத்திரங்கள் இடம்பெறுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அந்த தகவலின்படி நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது இந்த ப்ரோமோவை பற்றி நடிகர் சுதீப் கிஷன் தெரிவித்துள்ளார். மாநகரம் படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடித்திருந்தார். லோகேஷ் கனகராஜின் ஆரம்ப கால படங்கள் மூலமே அவரை நன்றாக அறிந்தவர் சந்தீப் கிஷன். இவர் சமீபத்தில் தளபதி 67 படத்தின் ப்ரோமோவை பார்த்ததாக தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து ஒரு தனியார் நிகழ்ச்சியில் பேசிய சந்தீப், “லோகேஷ் கனகராஜ்ஜை நான் ஆரம்பம் முதல் பார்த்து வருகிறேன். அவர் அனைவரது எதிர்ப்பார்ப்பையும் பூர்த்தி செய்வார் என்று எனக்கு தெரியும். தளபதி 67 படத்தின் ப்ரோமோ நிச்சயம் உங்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும். நான் நினைத்ததை விடவும் 10 மடங்கு ப்ரோமோ நன்றாக உள்ளது” என தெரிவித்திருக்கிறார்.

தளபதி 67 படத்தின் ப்ரோமோ வரும் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


First published:

Tags: Actor Thalapathy Vijay, Actor Vijay, Lokesh Kanagaraj