ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய்யின் வாரிசைத் தொடர்ந்து தனுஷின் ’வாத்தி’... கைப்பற்றிய 'தளபதி 67' பட நிறுவனம்!

விஜய்யின் வாரிசைத் தொடர்ந்து தனுஷின் ’வாத்தி’... கைப்பற்றிய 'தளபதி 67' பட நிறுவனம்!

'வாத்தி' தனுஷ் - 'வாரிசு' விஜய்

'வாத்தி' தனுஷ் - 'வாரிசு' விஜய்

தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்த வாரிசு படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தற்போது தனுஷின் வாத்தி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையையும் கைப்பற்றியுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

நடிகர் விஜய்யின் 'மாஸ்டர்' படத்தின் இணை தயாரிப்பாளரான லலித் குமார் தனது செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் சார்பாக 'தளபதி 67' படத்தை தயாரிக்கவிருக்கிறார். மேலும் பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் நடிகர் விஜய்யின் 'வாரிசு' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இதனால் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் செவன் ஸ்கீரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் பிரபலமாகிவருகிறது. 'தளபதி 67' பட அப்டேட்களுக்காக ஏராளமான விஜய் ரசிகர்கள் அந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தை பின்தொடர்ந்துவருகின்றனர்.

தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்த 'வாரிசு' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தற்போது தனுஷின் வாத்தி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையையும் கைப்பற்றியுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர்பக்கத்தில் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கிவருகிறார். சம்யுக்தா மேனன் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கில் 'சார்' என்ற பெயரில் வெளியாகவிருக்கும் இப்படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

First published:

Tags: Actor dhanush, Actor Thalapathy Vijay