Home /News /entertainment /

லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணையும் தளபதி 67 படத்தின் புதிய தகவல்கள்...

லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணையும் தளபதி 67 படத்தின் புதிய தகவல்கள்...

லோகேஷ் கனகராஜ் - விஜய்

லோகேஷ் கனகராஜ் - விஜய்

Thalapathy 67 Update : லோகேஷின் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படம் பிரமாண்ட வெற்றி பெற்றதற்கு படத்தில் இடம்பெற்ற மல்டி ஸ்டார்கள் முக்கிய காரணம்.

    விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் தளபதி 67 படத்துடைய புதிய தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

    தளபதி விஜய்யின் பிறந்த நாள் நாளை கொண்டாடப்படும்  நிலையில் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இதையொட்டி பல்வேறு நல உதவிகள் ரசிகர்களால் மேற்கொள்ளப்படுகிறது.

    அத்துடன் இன்று மாலை தளபதி 66 படத்தின் டைட்டில் அறிவிப்பு மற்றும ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தளபதி 67 படம் குறித்த சுவாரசிய தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.

    அக்டோபர் மாதத்திற்குள்ளாக தளபதி 66 படத்தின் ஷூட்டிங் நிறைவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின்னர் தனது 67 வது படத்தில் முழு கவனம் செலுத்தவுள்ளார் விஜய்.

    இதையும் படிங்க - ரெட் ஜெயன்ட் வெற்றிப் பட வரிசையில் இடம்பெறாத பீஸ்ட்… உதயநிதி மீது விஜய் ரசிகர்கள் வருத்தம்

    இந்த படத்தை மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

    தயாரிப்பு நிறுவனத்தை  பொருத்தளவில் மாஸ்டர் படத்தை விநியோகம் செய்த செவன் ஸ்க்ரீன்  ஸ்டூடியோ அல்லது கமலின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க - ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த விஜய்யின் டாப் 10 படங்கள் இதுதான்!

    தளபதி 67 படத்தின் கதை தனக்கு மிகவும் பிடித்தமானது என்றும், இந்த படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடிக்கவுள்ளதாகவும் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். கூடுதல் தகவலாக தளபதி 67 படத்தில், தனது  நிஜ வயதையொத்த கேங்ஸ்டராக விஜய் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

    லோகேஷின் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படம் பிரமாண்ட வெற்றி பெற்றதற்கு படத்தில் இடம்பெற்ற மல்டி ஸ்டார்கள் முக்கிய காரணம். இதே ஃபார்முலாவை விஜய் படத்திற்கும் அவர் பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    லோகேஷ் இயக்கிய முந்தை படங்களின் தொடர்ச்சியாக இருக்குமா அல்லது தனித்த படமாக தளபதி 67 உருவாகுமா என்ற எதிர்பார்ப்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.

    எது எப்படி இருந்தாலும் தளபதி 67 படம் குறித்த அப்டேட் விஜய்யின் இந்த பிறந்த நாளையொட்டி வராது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vijay

    அடுத்த செய்தி