முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தளபதி 67 படத்தின் டைட்டில் அப்டேட் வெளியானது… ரத்தம் தெறிக்கும் போஸ்டர் வைரல்

தளபதி 67 படத்தின் டைட்டில் அப்டேட் வெளியானது… ரத்தம் தெறிக்கும் போஸ்டர் வைரல்

தளபதி 67 போஸ்டர் - விஜய்

தளபதி 67 போஸ்டர் - விஜய்

படத்தின் டைட்டில், புரொமோ வீடியோவுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தளபதி 67 படத்தின் டைட்டிக்கான அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. ரத்தம் தெறிக்கும் போஸ்டருடன் டைட்டில் அப்டேட் குறித்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ்சினிமா ஆவலுடன் எதிர்பார்க்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் ஷூட்டிங், கடந்த மாதம் தொடங்கியது. அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்றுள்ளனர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா இடம்பெற்றுள்ளார்.

அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், கவுதம் மேனன் உள்ளிட்டோர் படத்தில் நடிக்கின்றனர். கத்தி, பீஸ்ட் படங்களை தொடர்ந்து அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பீஸ்ட் படத்தில் ஒளிப்பதிவு மேற்கொண்ட மனோஜ் பரமஹம்சா தளபதி 67 படத்தில் இணைந்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக எஸ்.எஸ்.லலித்குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். தற்போது தற்போது தளபதி 7 படத்தின் அப்டேட்களை தொடர்ச்சியாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் படத்தின் டைட்டில் குறித்த அப்டேட்டை வெளியிடப்பட்டுள்ளது. இதில் கை மற்றும் உடல் முழுவதும் ரத்தம் தெறிக்க விஜய் காட்சியளிக்கிறார். இந்த அப்டேட்டில் நாளை மாலை 5 மணிக்கு படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டரை விஜய் ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர். நாளை படத்தின் டைட்டில் புரொமோ வீடியோவுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாட்டிலைட் உரிமத்தை சன் டிவியும், டிஜிட்டல்  - ஓ.டி.டி. வெளியீட்டு உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமும் பெற்றுள்ளன. இதே போன்று ஆடியோ வெளியீட்டு உரிமையை சோனி மியூசிக் பெற்றுள்ளது. தளபதி 67 படத்தில் மிகப் பெரும் நிறுவனங்கள் இணைந்திருப்பதால், படத்தின் பிசினஸ் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Actor Vijay