விஜய் நடிப்பில் லோகேஷ் கனராஜ் இயக்கும் புதிய படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித்குமார் தயாரிக்கிறார். இது தொடர்பான அறிக்கையில், மாஸ்டர், வாரிசு படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக நடிகர் விஜயுடன் இணைவதில் மிகுந்த மகிழ்ச்சி என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், நடிகர் விஜயின் மேலாளரான ஜெகதீஷ் பழனிசாமி இப்படத்தின் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார். இசையமைப்பாளராக அனிருத், ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் தகவலையும் வெளியிட்டுள்ளனர். ஜனவரி 2ம் தேதி படப்பிடிப்பு தொடங்கியதாகவும், வரும் நாட்களில் இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் தகவலும், ப்ரோமோ வீடியோ வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.
Good evening guys! More than happy to join hands with @actorvijay na once again ❤️ 🔥#Thalapathy67 🤜🏻🤛🏻 pic.twitter.com/4op68OjcPi
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) January 30, 2023
இதனிடையே, சமூக வலைதளங்களில் சிறிது காலம் ஒதுங்கி இருந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜயுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தளபதி 67 என தற்போது பெயரிட்டுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் நடிகர் விஜயின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.