Home /News /entertainment /

Thalapathy 67: விஜய்யின் தளபதி 67 படத்தில் மன்சூர் அலிகான்?

Thalapathy 67: விஜய்யின் தளபதி 67 படத்தில் மன்சூர் அலிகான்?

விஜய் - மன்சூர் அலிகான்

விஜய் - மன்சூர் அலிகான்

நடிகர் மன்சூர் அலி கான் மீது தனது விருப்பத்தை அடிக்கடி வெளிப்படுத்தும் லோகேஷ், தற்போது தனது அடுத்த படத்தில் அவருக்காக ஒரு அற்புதமான கதாபாத்திரத்தை எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நடிகர் விஜய்யின் 67-வது படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    'விக்ரம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், 'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் மீண்டும் நடிகர் விஜய்யுடன் 'தளபதி 67' படத்தில் இணைவது ஏறக்குறைய உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே நடிகர் மன்சூர் அலி கான் மீது தனது விருப்பத்தை அடிக்கடி வெளிப்படுத்தும் லோகேஷ், தற்போது தனது அடுத்த படத்தில் அவருக்காக ஒரு அற்புதமான கதாபாத்திரத்தை எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மன்சூர் அலி கானுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக இருப்பதாகவும், அவருக்காக தனது வரவிருக்கும் படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தை எழுதியுள்ளதாகவும் கூறினார். மேலும் படத்திற்கான ஸ்கிரிப்டை மன்சூர் அலிகா சொல்லவில்லை என்பதையும் தெரிவித்தார்.

    75th Independence Day: ரஜினிகாந்த் முதல் தனுஷ் வரை... சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நடிகர் விஜய் தற்போது தனது வாரிசு படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இதனை வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். இதற்கிடையே அவரின் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் தற்காலிகமாக தளபதி 67 என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Lokesh Kanagaraj, Thalapathy vijay

    அடுத்த செய்தி