Home /News /entertainment /

தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லன் இவர்தான்… புதிய தகவலால் ரசிகர்கள் உற்சாகம்

தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லன் இவர்தான்… புதிய தகவலால் ரசிகர்கள் உற்சாகம்

விஜய்

விஜய்

விஜயின் 67- ஆவது படத்தில் அவர் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கேங்ஸ்டராக நடிப்பார் என்று தகவல்கள் வெளிவந்தன

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தளபதி 67 படத்தில் விஜய்யின் வில்லன் யார் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

    விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யின் 67வது படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திற்கான திரைக்கதையை வடிவமைப்பதில் லோகேஷ் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    விஜயின் 67- ஆவது படத்தில் அவர் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கேங்ஸ்டராக நடிப்பார் என்று தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிப்பார் என்பது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.

    Ponniyin Selvan: விறுவிறுப்பாக நடக்கும் பொன்னியின் செல்வன் வியாபாரம்!

    கே.ஜி.எஃப் 2 படத்தில் வில்லனாக அதிரா என்ற கேரக்டரில் சஞ்சய் தத் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். இதேபோன்று சஞ்சய் தத் படத்தில் இடம் பெற்றார் தளபதி 67 படம் இந்திய அளவில் கவனம் பெறும் என்றும் படக்குழுவினர் கருதுகின்றனர்.

    சஞ்சய் தத்


    இந்த படத்தில் பல வில்லன்களை இடம்பெற வைப்பதற்கு லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் சஞ்சய் தத்தும் ஒருவராக இருப்பார்.

    Vadivelu Birthday: வடிவேலு பிறந்தநாளை பிரமாண்டமாகக் கொண்டாடிய உதயநிதி ஸ்டாலின்!

    இன்னொரு வில்லனாக நடிப்பதற்கு மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான பிரித்விராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் அக்டோபர் அல்லது நவம்பரில் தொடங்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

    அடுத்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனடிப்படையில் அடுத்த ஆண்டு மட்டும் விஜய்க்கு வாரிசு மற்றும் தளபதி 67 என இரண்டு படங்கள் வெளியாக உள்ளன.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vijay

    அடுத்த செய்தி