ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

லோகேஷ் கனகராஜின் LCU-வுக்காக விஜய்யுடன் இணையும் முன்னணி நடிகர்கள்?

லோகேஷ் கனகராஜின் LCU-வுக்காக விஜய்யுடன் இணையும் முன்னணி நடிகர்கள்?

விஜய் - லோகேஷ் கனகராஜ்

விஜய் - லோகேஷ் கனகராஜ்

'தளபதி 67' சில நாட்களுக்கு முன்பு பூஜையுடன் ஸ்டார்ட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பூஜையின் ஸ்டில்களை தயாரிப்பாளர்கள் இன்னும் வெளியிடவில்லை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் விஜய்யுடன் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸுக்காக இணையவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தயாராகி வருகின்றனர் தயாரிப்பாளர்கள். தற்போது, 'தளபதி 67' படத்தின் ப்ரோமோ ஷூட் முடிவடைந்துள்ளதாகவும், படத்தின் அறிவிப்பை வெளியிடும் ப்ரோமோவையும் படக்குழுவினர் எடுத்துள்ளதாகவும், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் சினிமாடிக் யுனிவர்ஸில் (LCU) இணைந்துள்ளதாகவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

'தளபதி 67' சில நாட்களுக்கு முன்பு பூஜையுடன் ஸ்டார்ட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பூஜையின் ஸ்டில்களை தயாரிப்பாளர்கள் இன்னும் வெளியிடவில்லை. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படம், லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸாக இருக்கும் எனத் தெரிகிறது.

இதற்கிடையில், சென்னையில் விஷாலின் 'லத்தி' பட பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்த லோகேஷ் கனகராஜ், 'தளபதி 67' பற்றிய விவரங்களை வெளியிட மறுத்துவிட்டார். இருப்பினும் விஜய்யின் வாரிசு வெளியீட்டிற்குப் பிறகு தயாரிப்பாளர்களிடமிருந்து தளபதி 67 படம் குறித்து சில அறிவிப்புகள் வரும் என்று ரசிகர்களுக்கு உறுதியளித்தார்.

காசே தான் கடவுளடா... அஜித்தின் துணிவு படத்தின் செகண்ட் சிங்கிள்!

வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ள 'வாரிசு' படத்தில் விஜய் இளம் தொழிலதிபராக நடித்துள்ளார். மேலும் இப்படம் ஜனவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா டிசம்பர் கடைசி வாரத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Suriya, Actor Vijay, Fahadh Faasil, Kamal Haasan, Lokesh Kanagaraj