ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

லோகேஷ் கனகராஜின் தளபதி 67 படத்தில் வலிமை பட நடிகை?! தீயாய் பரவும் போட்டோ!

லோகேஷ் கனகராஜின் தளபதி 67 படத்தில் வலிமை பட நடிகை?! தீயாய் பரவும் போட்டோ!

லோகேஷுடன் விஜய்

லோகேஷுடன் விஜய்

விக்ரம் படத்தின் தன்னுடைய ஸ்டைலான யுனிவர்ஸைக் காட்டிய லோகேஷ் கனகராஜ், இந்தப்படத்திலும் தன்னுடைய சினிமேட்டிக் யுனிவர்ஸை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வாரிசு படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கும்  படத்தில் விஜய் நடிக்க உள்ளார். அது அவரின் 67-வது திரைப்படமாக உருவாக உள்ளது.  அந்த திரைப்படத்தை மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார். அதேபோல் விஜயின் மேலாளர் ஜெகதீஷ் அந்த திரைப்படத்தில் இணை தயாரிப்பாளராக இணைகிறார். விஜய் 67 திரைப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

  Also Read: தேடித் தேடி அலைய வேண்டாம்.. ஹாட் ஸ்டாரில் இருக்கு சூப்பர் மலையாள படங்கள்!

  விக்ரம் படத்தின் தன்னுடைய ஸ்டைலான யுனிவர்ஸைக் காட்டிய லோகேஷ் கனகராஜ், இந்தப்படத்திலும் தன்னுடைய சினிமேட்டிக் யுனிவர்ஸை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் மும்பை சார்ந்த கேங்ஸ்டர் வகையில் இந்த திரைப்படத்தை அவர் எடுக்க உள்ளார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. படத்துக்கான வேலையையும் கிட்டத்தட்ட தொடங்கிவிட்டார் லோகேஷ். அதேசமயம் ஹாலிவுட் வெளியான ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் என்ற திரைப்படத்தின் ரீமேக் உரிமையையும் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக வாங்கியுள்ளார். எனவே அந்த திரைப்படத்தின் சாயலும், விஜய் 67 இருக்கலாம் என கூறப்படுகிறது.

  விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகவுள்ள அந்தப் படத்தின், திரையரங்கு வெளியீட்டுக்கு பிந்தைய டிஜிட்டல் உரிமையை பெற நெட்பிளிக்ஸ் நிறுவனம் முயற்சிக்கிக்கிறது. அதுவும் 125 கோடி ரூபாய் வழங்கவும் அந்த நிறுவனம் தயாராகவுள்ளது. அதேபோல் சோனி நிறுவனம் படத்தின் ஆடியோ உரிமையை பெற திட்டமிட்டுள்ளது. அந்த நிறுவனம் 14 கோடி ரூபாய் கொடுத்து ஆடியோ உரிமத்தைப் பெற பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது எனவும் தகவல் கிடைத்துள்ளது.

  Also Read: அமேசான் ப்ரைமில் சூப்பர் ஹிட் மலையாளப் படங்கள்! இதோ உங்களுக்கான டாப் 10 லிஸ்ட்!

  இந்நிலையில் அவர் தற்போது எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது. மலையாள நடிகைகள் ஷான் ரோமி மற்றும் பியர் மானேவுடன் அந்த க்ளிக்கை எடுத்துள்ளார். கம்மாட்டி படம் மூலம் புகழ்பெற்ற ஷான் பிரபல மாடலாக உள்ளார். அவர் சில மலையாளப்படங்களிலும் முகம் காட்டியுள்ளார்.

  லோகேஷ் கனகராஜுடன் மலையாள நடிகைகள்

  பியர் மானே யூடியூபர் மற்றும் நடிகை ஆவார். சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்நிலையில் அவர்களுடன் லோகேஷ் க்ளிக் செய்து உள்ளதால் தளபதி 67 படத்திலும் அவர் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது


  Published by:Murugadoss C
  First published:

  Tags: Actor Thalapathy Vijay, Lokesh Kanagaraj