ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இதுதான் 'தளபதி 67' படத்தில் விஜய்யின் லுக்கா? - புதிய கெட்டப்பில் நடிகர் விஜய் - வைரலாகும் லேட்டஸ்ட் ஃபோட்டோ

இதுதான் 'தளபதி 67' படத்தில் விஜய்யின் லுக்கா? - புதிய கெட்டப்பில் நடிகர் விஜய் - வைரலாகும் லேட்டஸ்ட் ஃபோட்டோ

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

இந்தப் படத்தில் கைதி கார்த்தி, விக்ரம் கமல், ரோலெக்ஸ் சூர்யா ஆகியோர் இடம்பெருவார்களா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

• News18 Tamil
• 2 minute read
• Last Updated :
• Chennai, India

வாரிசு படம் தற்போது வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இதனையடுத்து நடிகர் விஜய் தற்போது தளபதி 67 படத்தில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் துவங்கியது. வாரிசு பட வெளியீடுக்காக தற்போது பிரேக் விடப்பட்ட நிலையில் அடுத்ததாக காஷ்மீரில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி என இருவரும் ஜோடி சேர்ந்து நடித்த படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. மேலும் அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் மலையாள நடிகர் நிவின் பாலியும் இந்தப் படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. பீஸ்ட், வாரிசு என அடுத்தடுத்து விஜய் நடிக்கும் படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருவதால் தளபதி 67 படத்தை ரசிகர்கள் மிக பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் புதிய லுக் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. தொகுப்பாளர் ரம்யா சுப்ரமணியன் சமீபத்தில் நடிகர் விஜய்யை சந்தித்து அவர் எழுதியுள்ள ஸ்டாப் வெயிட்டிங் (Stop Weighting) என்ற புத்தகத்தை பரிசளித்தார். அப்போது விஜய்யுடன் எடுத்தக்கொண்ட படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, என்னுடையை ஸ்டாப் வெயிட்டிங்கை எடுத்துக்கொண்டு ஐ ஆம் வெயிட்டிங்கை சந்தித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தொகுப்பாளர் ரம்யாவுடன் நடிகர் விஜய்

தொகுப்பாளர் ரம்யா நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் இவர் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

When I took ‘STOP WEIGHTING’ to meet ‘I AM WAITING’ !!!! 💃🏻😍🤩🥳🔥😉🙏🏻

On that note wishing you all a Super Duper Happy Pongalo Pongal !!!!♥️♥️♥️♥️#PongaloPongal #StopWeighting #Vaarisu #NewYear2023 pic.twitter.com/b8XJao8anb
— Ramya Subramanian (@actorramya) January 15, 2023

இந்த போட்டோவில் நடிகர் விஜய் முன்னால் முடியை விட்டிருக்கிறார். ஒருவேளை இதுதான் தளபதி 67 படத்தில் விஜய்யின் லுக்காக இருக்குமோ என கமெண்ட் செய்துவருகிறார்கள். இந்தப் படம் லோகேஷன் எல்சியூ அடிப்படையில் இந்தப் படம் உருவாகிவருவதாக கூறப்படுகிறது. அதன்படி இந்தப் படத்தில் கைதி கார்த்தி, விக்ரம் கமல், ரோலெக்ஸ் சூர்யா ஆகியோர் இடம்பெருவார்களா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Actor Vijay