விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் கதாநாயகி குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படுகிறது.
சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. அதற்குள்ளாக விஜய் நடிக்கும் 66வது படம் குறித்த அப்டேட்டுகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இருப்பினும் பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் சற்றும் குறையவில்லை.
ஏப்ரல் 14-ம்தேதி கேஜிஎஃப் பார்ட் 2 வெளியாகவுள்ள நிலையில் அதே தேதியில் பீஸ்ட் வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியிடப்பட்டால் அது சமீபத்திய சினிமாவின் மிகப்பெரும் மோதலாக அமையக் கூடும்.
இதையும் படிங்க -
விஜய்யின் வில்லன் அல்ல செல்வராகவன் - வெளியான புதிய தகவல்!
பீஸ்ட் படத்தை தொடர்ந்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு தயாரிக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். இதனை தமிழில் தோழா படத்தை இயக்கிய வம்சி இயக்கவுள்ளார்.
குடும்பம், ஆக்சன், சென்டிமென்ட், காதல் என அனைத்தும் கலந்த கலவையாக விஜய் 66 படம் உருவாக்கப்படவுள்ளது. இது துள்ளாத மனமும் துள்ளும், பூவே உனக்காக போன்றதொரு விஜய்யை ரசிகர்களுக்கு மீண்டும் அறிமுகப்படுத்தும் என்று தயாரிப்பாளர் தில் ராஜு கூறியுள்ளார். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் படம் சரியாக வரும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க -
இந்தி, தெலுங்கு மொழிகளில் விரைவில் வெளியாகிறது வலிமை ட்ரெய்லர்...
இந்நிலையில் படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா, ராஷி கன்னா, கியாரா அத்வானி ஆகிய 3 பேரில் ஒருவர் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தையொட்டி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.