தளபதி 66 படத்தில் விஜய்யின் அம்மா கேரக்டரில் நடிக்கும் நடிகை ஜெயசுதா குறித்த சுவாரசிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
வம்சியின் இயக்கத்தில் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் விஜய்யுடன் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்தியுள்ளது.
இதையும் படிங்க - அடேங்கப்பா... சிம்பு அணிந்த கோட் விலை இத்தனை லட்சமா!
தளபதி 66 படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயசுதா, ஷாம், ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 6 பாடல்களைக் கொண்டதாக படம் உருவாக்கப்பட்டு வருவதாக இசையமைப்பாளர் தமன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விஜய்க்கு அம்மாவாக நடிகை ஜெயசுதா நடிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 1973-ல் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த அரங்கேற்றம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஜெயசுதா அறிமுகம் ஆனார்.
இதையும் படிங்க - Don Review: சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் எப்படி உள்ளது?
சமீபத்தில் மணி ரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் படத்தில், பிரகாஷ் ராஜின் மனைவியாக, அரவிந்த் சாமி, அருண் விஜய் மற்றும் சிம்புவுக்கு அம்மா கேரக்டரில் நடித்து, ரசிகர்களின் கவனத்தை ஜெயசுதா பெற்றார்.
தளபதி 66 படத்தை இயக்கும் வம்சியின் இயக்கத்தில் முன்னதாக தோழா என்ற படத்தில் கார்த்திக்கு அம்மாவாகவும் ஜெயசுதா நடித்துள்ளார். அம்மா கேரக்டருக்கு பொருத்தமான நடிகை, தளபதி 66 படத்தில் இடம்பெற்றுள்ளதால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.