பீஸ்ட் அப்டேட்டுகள் ஓரளவு முடிவுக்கு வந்த நிலையில் விஜய் ரசிகர்களின் கவனம் அடுத்ததாக தளபதி 66 பக்கம் திரும்பியுள்ளது. இது தொடர்பாக கடுகளவு தகவல் கசிந்தாலும், ரசிகர்கள் அதை
ட்ரெண்ட் செய்து வைரலாக்கி விடுகின்றனர். அந்த அளவுக்கு எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
மிகவும் எதிர்பார்த்த பீஸ்ட் சுமாரான வெற்றியைத் தந்ததுதான் விஜய்யின் அடுத்த படத்தின் மீதான ஆவலை பன்மடங்கு அதிகரிக்க காரணம்.
எமோஷனல் காட்சிகளுக்கு பெயர் பெற்ற வம்சிதான் தளபதி 66 படத்தை இயக்குகிறார். ஃபேமிலி ஆடியன்ஸ், டைஹார்டு தளபதி ஃபேன்ஸ் உள்ளிட்ட அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் இந்த படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க - கமலின் விக்ரம் பட ட்ரெய்லர் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் வெளியீடு
விஜய்க்கு ஜோடியாக ரியாக்சன் குயின் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார் படத்தில் இடம்பெற்றுள்ள நிலையில் நடிகர் ஷாம் இணைந்துள்ளார். இதுதொடர்பாக கடந்த சில நாட்களாக உறுதிபடுத்தப்படாத தகவல் பரவியது.
இந்நிலையில், தளபதி 66-ல் இணைந்திருப்பதை ஷாம் உறுதி செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த குஷி படத்தில் விஜய்க்கு நண்பராக சிறிய கேரக்டரில் ஷாம் நடித்திருப்பார்.
இதையும் படிங்க - அனைத்திந்திய சினிமா என்ற ஒன்று இல்லை: ஏன் இந்தி சினிமா ரீமேக் செய்யப்படுவதில்லையா?- அபிஷேக் பச்சன் பாய்ச்சல்
12பி படத்தில் ஹீரோவாக அறிமுகமான ஷாமிற்கு, லேசா லேசா, உள்ளம் கேட்குமே, இயற்கை உள்ளிட்ட படங்கள் வரவேற்பை பெற்றுத் தந்தன. இந்நிலையில் தளபதி 66-ல் இணைந்துள்ளார் ஷாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.