Home /News /entertainment /

தளபதி 66 படத்தில் இணைந்தார் நடிகர் பிரபு… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தளபதி 66 படத்தில் இணைந்தார் நடிகர் பிரபு… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் பிரபு

நடிகர் பிரபு

அடுத்த மாதம் விஜய் பிறந்த நாளையொட்டி தளபதி 66 படத்தின் டைட்டில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 66 படத்தில் நடிகர் பிரபு இணைந்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.

விஜய் நடிக்கும் 66வது படம் இன்னும் பெயரிடப்படாமல் தளபதி 66 என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், ஷாம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்தில் யோகி பாபுவும் இடம்பெற்றுள்ளார்.

தெலுங்கு முன்னணி இயக்குனர் வம்சி பைடிபள்ளி இந்த படத்தை இயக்க, வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜூ படத்தை தயாரித்து வருகிறார்.

இதையும் படிங்க - கே.ஜி.எஃப். பட நடிகர் மோகன் ஜுனேஜா காலமானார்... ரசிகர்கள், திரைத்துறையினர் இரங்கல்

குடும்பக்கதை, காதல், ஆக்சன், சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களை உள்ளடக்கியதாக இந்தப் படம் உருவாகி வருகிறது. விஜய் கடந்த சில ஆண்டுகளாக ஆக்சன் படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

2011-ல் வெளிவந்த நண்பன் படத்திற்கு பின்னர், பெரும்பாலான விஜய் படங்கள் ஆக்சன் படங்களாகவே இருக்கின்றன. இந்நிலையில் ஆக்சன் படங்களுக்கு மிகவும் வித்தியாசமான முறையில் தளபதி 66 படம் உருவாகி வருகிறது.



இந்நிலையில் படத்தில் இளைய திலகம் பிரபுவும் இடம்பெற்றிருப்பதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்பக் கதைகளில் பிரபு பின்னி எடுப்பார் என்பதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வர்த்தக ரீதியில் பீஸ்ட் திரைப்படம் வெற்றி பெற்றாலும், விஜய் ரசிகர்களைக் கூட இந்தப் படம் திருப்தி அடைய செய்யவில்லை. இந்த அதிருப்தியை தளபதி 66 நீக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் குறைந்த நாள்கள் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அடுத்தகட்டமாக ஐதராபாத்தில் பிரமாண்ட செட்களில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க - நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் நயன்தாரா படம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

அடுத்த மாதம் விஜய் பிறந்த நாளையொட்டி தளபதி 66 படத்தின் டைட்டில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published by:Musthak
First published:

Tags: Actor Vijay

அடுத்த செய்தி