Home /News /entertainment /

Thalapathy 66 அப்டேட்... 3-ம் கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் நாளை தொடக்கம்

Thalapathy 66 அப்டேட்... 3-ம் கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் நாளை தொடக்கம்

Thalapathy 66 : விஜய் - ராஷ்மிகா மந்தனா

Thalapathy 66 : விஜய் - ராஷ்மிகா மந்தனா

குடும்பம், ஆக்சன், சென்டிமென்ட், காதல், காமெடி என அனைத்தும் உள்ளடக்கியதாக தளபதி 66 உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார்.

விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் 3ம் கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் நாளை தொடங்குகிறது. இதில் படத்தில் இடம்பெறும் முக்கிய நடிகர்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் படம் குறித்த கூடுதல் சுவாரசிய தகவல்கள் நாளை முதல் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கலாம்.

பீஸ்ட் படத்திற்கு பின்னர் தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருக்கும் வம்சி பைடிபள்ளியின் இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் விஜய் நடித்து வருகிறார். பெயரிடப்படாத இந்த படம் தளபதி 66 என்ற வொர்க்கிங் டைட்டிலில் படமாக்கப்பட்டு வருகிறது.

எமோஷனலான படங்களை இயக்குவதில் நிபுணத்துவம் வாய்ந்தவர் என இயக்குனர் வம்சி பாராட்டப்படுகிறார். விஜய்யும் இதுபோன்ற காட்சிகளில் ஸ்கோர் செய்வார் என்பதால், நீண்ட நாட்களாக மிஸ் செய்த விஜய்யை இந்த படத்தில் பார்க்கலாம் என படக்குழுவினர் கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க - தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலை நெருங்கும் கே.ஜி.எஃப். 2

குடும்பம், ஆக்சன், சென்டிமென்ட், காதல், காமெடி என அனைத்தும் உள்ளடக்கியதாக தளபதி 66 உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். சரத்குமார், ஷாம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இதையும் படிங்க - Thalapathy66 அப்டேட் கொடுத்த சரத்குமார்... 'பவர்ஃபுல் ஸ்க்ரிப்ட்' என பாராட்டு

கடந்த மாதம் பூஜையுடன் தளபதி 66 படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது 2 கட்டங்களாக சென்னை உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் நாளை ஐதராபாத்தில் 3ம் கட்டமாக ஷூட்டிங் பிரமாண்ட அளவில் நடைபெறவுள்ளது.



இதில் படத்தில் இடம்பெறும் முக்கிய நடிகர்கள் பங்கேற்பார்கள் என்பதால், தளபதி 66 தொடர்பான பல அப்டேட்டுகள் நாளை முதற்கொண்டு வெளியாகலாம்.



தெலுங்கு சினிமாவில் கலக்கி வரும் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தில் சில பாடல்கள் கம்போஸ் செய்து முடிக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, உலகம் முழுவதும் பீஸ்ட் படத்தின் வசூல் ரூ. 240 கோடியை தாண்டியுள்ளது. கலவை விமர்சனங்கள் வந்தாலும் ஒற்றை ஆளாக பீஸ்ட்டை தூக்கி நிறுத்தியுள்ளார் தளபதி விஜய்.
Published by:Musthak
First published:

Tags: Actor Vijay

அடுத்த செய்தி