விஜய்யின் அடுத்தப்படமான தளபதி 66-ல் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தற்போது தனது 65-வது படமான ’பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதையடுத்து படம் வரும் 13-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 66-வது படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். தற்காலிகமாக 'தளபதி 66' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கிருத்திகா உதயநிதி படத்தின் டைட்டில் மற்றும் முதல் சிங்கிள் வெளியீடு
இந்நிலையில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே பலமாக எழுந்தது. அதில் ராஷ்மிகாவின் பெயர் முன்னிலையில் இருந்தது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
சன் டிவி சீரியலில் இருந்து பிரபல வில்லி விலகல்... அதிர்ச்சியில் ரசிகர்கள்
இன்று ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் படக்குழுவினர். அதோடு இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.