Home /News /entertainment /

#Thalapathy66 : விஜய்யின் அடுத்த படத்தின் கதை குறித்து அப்டேட் வெளியிட்ட தயாரிப்பாளர் தில் ராஜு

#Thalapathy66 : விஜய்யின் அடுத்த படத்தின் கதை குறித்து அப்டேட் வெளியிட்ட தயாரிப்பாளர் தில் ராஜு

விஜய்

விஜய்

பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் படங்களில் பார்த்த விஜய்யை இதில் பார்க்கலாம்.

    விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் கதை குறித்த அப்டேட்டை, தயாரிப்பாளர் தில் ராஜு வெளியிட்டுள்ளார். 24 ஆண்டுகளுக்கு பிறகு இப்படியொரு விஜய்யை பார்க்கப் போகிறோம் என்கிற உற்சாகத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

    விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் படம் கே.ஜி.எஃப். 2 உடன் மோதுமா அல்லது மற்ற தேதியில் வெளியாகுமா என்பது குறித்த விபரம் பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர் விஜய் நடிக்கும் 66-வது படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது.

    இதனை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தயாரிக்க முன்னணி இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கவுள்ளார்.

    இதையும் படிங்க : விஜய் சேதுபதியின் இந்தி படம் ஓடிடியில் ரிலீஸ்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    கடந்த 20 ஆண்டுகளில் கேட்ட மிகச்சிறந்த கதை என்று விஜய் சொல்லியதாக தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் மற்றொரு நேர்காணலில் விஜய் படத்தின் அப்டேட்டுகளை அள்ளித் தந்துள்ளார் ராஜு.

    நேர் காணலில் அவர் கூறியதாவது-
    இயக்குனர் வம்சி மிகச்சிறப்பான கதை ஒன்றை சொன்னார். அது விஜய்க்கும் எனக்கும் மிகவும் பிடித்து விட்டது. இது குடும்பக் கதையை மையமாக கொண்ட படம். பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் படங்களில் பார்த்த விஜய்யை இதில் பார்க்கலாம். ஆக்சன், பொழுதுபோக்கு என அனைத்து அம்சங்களும் கொண்டதாக இந்தப் படம் இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக மிக முக்கிமான மெசேஜ் இந்தப் படத்தில் உள்ளது. மொத்தத்தில் ஹார்ட் டச்சிங்காக இந்த படம் அமையும்.
    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க :  22 வருடங்களுக்குப் பிறகு அஜித்துடன் இணையும் தபு!
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vijay

    அடுத்த செய்தி