Home /News /entertainment /

Thalapathy66 அப்டேட் கொடுத்த சரத்குமார்... 'பவர்ஃபுல் ஸ்க்ரிப்ட்' என பாராட்டு

Thalapathy66 அப்டேட் கொடுத்த சரத்குமார்... 'பவர்ஃபுல் ஸ்க்ரிப்ட்' என பாராட்டு

தளபதி 66 பூஜையின்போது சரத்குமார், விஜய்.

தளபதி 66 பூஜையின்போது சரத்குமார், விஜய்.

அனைத்து ரசிகர்களையும் திருப்திபடுத்தும் விதமாக Thalapathy 66 அமையும் என்று அதன் இயக்குனர் வம்சி கூறியுள்ளார்.

Thalapathy 66 படம் தொடர்பான சில அப்டேட்டுகளை படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் சரத்குமார் தெரிவித்துள்ளார். இது படத்தின் மீதான சுவாரசியத்தை அதிகரித்துள்ளது.

கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும், பீஸ்ட் திரைப்படம் ஓரளவு வசூலை கலெக்ட் செய்து வருகிறது. இயக்குனர் மீது கடும் விமர்சனம் வைக்கப்படும் நிலையில், ஒற்றை மனிதராக படத்தை தோல்வியில் இருந்து விஜய் தடுத்து நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. குடும்ப படத்தில் விஜய் நடித்து பல ஆண்டுகள் ஆன நிலையில், அனைத்து ரசிகர்களையும் திருப்திபடுத்தும் விதமாக Thalapathy 66 அமையும் என்று அதன் இயக்குனர் வம்சி கூறியுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், தெலுங்கு, தமிழ் என 2 மொழிகளில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - திருமண நிச்சயதார்த்தத்தை அறிவித்த பிகில் நடிகை காயத்ரி ரெட்டி!

விஜய் 2 ரோலில் நடிப்பதாகவும், ஒருவருக்கு ராஷ்மிகா மந்தனா ஜோடி என்றும் இன்னொரு விஜய்க்கான ஹீரோயின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்யுடன் சரத்குமார், ஷாம் ஆகியோர் இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - பிரபல நடிகையின் சொத்துகள் முடக்கம்.. கூடா நட்பால் மார்க்கெட் சரிந்த சோகம்

இந்த நிலையில் Thalapathy 66 படம் குறித்த சில அப்டேட்டுகளை சரத்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்திருக்கும் பேட்டி ஒன்றில், 'தளபதி 66 படப்பிடிப்பில் நான் இம்மாதம் இணைகிறேன். ஆகஸ்ட் மாதத்திற்குள் ஷூட்டிங் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கிறேன். தளபதி 66 படத்தின் ஸ்க்ரிட் மிகவும் பவர்ஃபுல்லானது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படியாக இந்த ஸ்க்ரிப்ட் அமைந்துள்ளது. விஜய்யுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று தெரிவித்துள்ளார்.

தளபதி 66 படத்திற்கு தெலுங்கில் முன்னணியில் இருக்கும் இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ஒரு சில பாடல்கள் பதிவு நிறைவு பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published by:Musthak
First published:

Tags: Actor Vijay

அடுத்த செய்தி