Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய் பிறந்த நாளையொட்டி வெளியாகுமா தளபதி 66 டைட்டில்? லேட்டஸ்ட் அப்டேட்…

விஜய் பிறந்த நாளையொட்டி வெளியாகுமா தளபதி 66 டைட்டில்? லேட்டஸ்ட் அப்டேட்…

தளபதி 66 இயக்குனர், தயாரிப்பாளருடன் விஜய்

தளபதி 66 இயக்குனர், தயாரிப்பாளருடன் விஜய்

Thalapathy 66 Title : குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தளபதி 66 திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தளபதி 66 படத்தின் டைட்டிலை விஜய்யின் பிறந்த நாளையொட்டி வெளியிட இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

பீஸ்ட் திரைப்படத்தைத் தொடர்ந்து வம்சி இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இதற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் சமீபத்தில் முடிவடைந்தது.

இதைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட படப்பிடிப்பு வரும் திங்கட்கிழமை முதல் சென்னையில் தொடங்குகிறது. அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஜயின் பிறந்தநாள் வரும் 22ஆம் தேதி வருவதால் அந்த நாளில் படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை வெளியிட தயாரிப்பாளர் தில் ராஜு திட்டமிட்டிருக்கிறார்.

இதற்காக தலைப்பைத் தேர்வு செய்து பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக படத்தின் தலைப்பு அடுத்த வாரம் பதிவு செய்யப்பட்டு விடும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க - Vikram Box Office: கமல் படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூலை குவித்த ‘விக்ரம்’… எத்தனை கோடி தெரியுமா?

விஜய் நடிக்கும் இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.

விஜய் கடைசியாக நடித்த பீஸ்ட் திரைப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி கடைசியில் விஜய் ரசிகர்களையே திருப்தி அடையாமல் சென்றது. வசூல் ரீதியாக பீஸ்ட் வெற்றி பெற்றாலும், விமர்சன ரீதியில் பீஸ்ட் பின்னடைவை சந்தித்தது. இதனை தளபதி 66 படம் சரி செய்யும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

இதையும் படிங்க - விஜய் 66: இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்று துவக்கம்!

தெலுங்கில் எமோஷனல் படங்களுக்கு பெயர்போன வம்சிதான் தளபதி 66 படத்தை இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த மகேஷ் பாபுவின் மகரிஷி திரைப்படம் மெகாஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Actor Vijay