விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தை தெலுங்கிலும் சூப்பர் ஹிட்டாக்கும் முயற்சியாக இந்தப் படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க இயக்குனர் வம்சி முயற்சி மேற்கொண்டுள்ளார்.
ஏற்கனவே மகேஷ் பாபுவை வைத்து மகரிஷி என்ற மெகா ஹிட் படத்தை இயக்கியவர்தான் தற்போது விஜய் படத்தை இயக்கும் வம்சி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் விஜய்க்கு இருக்கும் ரசிகர்களைப் போன்று தெலுங்கு சினிமாவில் மகேஷ் பாபுவுக்கு ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே கில்லி, போக்கிரி உள்ளிட்ட படங்களை இரு மொழிகளிலும் கொடுத்துள்ளார்கள்.
இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்பு. ஆனால் சரியான கதை, இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் இல்லாமல் ரசிகர்களின் இந்த ஆசை கனவாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க - ரோலக்ஸாக மாற்றிய மேக்அப் – டிசைனருக்கு நன்றி தெரிவித்த சூர்யா… வைரலாகும் பதிவு
இந்நிலையில் தளபதி 66 படத்தில் மகேஷ் பாபுவை நடிக்க வைத்த விடலாம் என்ற முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குனர் வம்சி பைடிபள்ளி. இவர் ஏற்கனவே மகேஷ் பாபுவை வைத்து மகரிஷி படத்தை இயக்கினார். இந்த படம் மெகா ஹிட்டானது.
எனவே, எப்படியும் தளபதி 66 படத்தில் மகேஷை வம்சி இணைத்து விடுவார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.
தமிழில் தளபதி 66 சூப்பர் ஹிட்டாகி விடும் என்பதில் சந்தேகம் இல்லை. இதேபோன்று மகேஷ் படத்தில் இடம்பெற்றால் தெலுங்கிலும் ஹிட்டடிக்கும் என்பதால் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க - நடிகர் சூரியின் வெறித்தனமான ஒர்க்கவுட் வீடியோ!
தளபதி 66 படத்தில் விஜய்க்கு 2 கேரக்டர்கள் என்று சொல்லப்படுகிறது. 2 ஹீரோயின் என தகவல் வெளிவந்த நிலையில் ஒருவர் ராஷ்மிகா என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னொருவர் சமந்தாவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயசுதா, குஷ்பு, ஷாம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் குடும்ப கதையில் விஜய் நடிப்பதால் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
சமீப காலமாக சால்ட் அண்டு பெப்பர் லுக்கில் விஜய் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் இளமையாக தோற்றம் அளிக்கிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.