Home /News /entertainment /

விஜய்யின் தளபதி 66 படத்தில் இடம் பெறுகிறாரா மகேஷ் பாபு? லேட்டஸ்ட் தகவலால் பரபரப்பு

விஜய்யின் தளபதி 66 படத்தில் இடம் பெறுகிறாரா மகேஷ் பாபு? லேட்டஸ்ட் தகவலால் பரபரப்பு

மகேஷ் பாபு - விஜய்

மகேஷ் பாபு - விஜய்

Thalapathy 66 : மகேஷ் பாபு சென்னையில் வளர்ந்தவர் என்பதால் மிக சரளமாக அவர் தமிழில் பேசுவார்.

    விஜய்யின் தளபதி 66 படத்தில் மகேஷ் பாபு இடம்பெறுவது குறித்து புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளார்கள்.

    தொடர்ந்து அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த படங்களில் தளபதி விஜய் நடித்து வந்த நிலையில், தெலுங்கு முன்னணி இயக்குனர் வம்சியின் இயக்கத்தில் குடும்பக் கதை படத்தில் நடித்து வருகிறார்.

    தளபதி 66 படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா, சரத் குமார்,பிரகாஷ் ராஜ், பிரபு, குஷ்பு உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

    இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படம் தளபதி 66 என்ற ஒர்க்கிங் டைட்டிலில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் டைட்டில் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதியையொட்டி அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க - யூடியூபில் 50 மில்லியன் பார்வைகளைக் கடந்த விக்ரம் பட பாடல்… 

    தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய 2 மொழிகளில் தளபதி 66 படம் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழில் இந்தப் படம் நல்ல வசூலை குவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரம் தெலுங்கிலும் வசூலை அள்ள படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

    இதனால் அங்கு முன்னணி ஹீரோவாக இருக்கும் மகேஷ் பாபுவை இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் இடம்பெற வைக்க முயற்சி நடந்து வருகிறது.

    இதையும் படிங்க - அழகில் ஹீரோயின்களை மிஞ்சும் பாடகி ஜொனிதா காந்தி 

    லேட்டஸ்ட் தகவலின்படி, தளபதி 66 படத்தில் இடம்பெற்றுள்ள கேரக்டர்களை மகேஷ் பாபு அறிமுகம் செய்து வைப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் சிறப்பு தோற்றத்திலும் அவர் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிகிறது.

    இதையும் படிங்க - கார்த்தி திரைப்படத்தை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்

    மகேஷ் பாபு சென்னையில் வளர்ந்தவர் என்பதால் மிக சரளமாக அவர் தமிழில் பேசுவார். முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த ஸ்பைடர்படத்தில் முழுவதுமாக  தமிழில் பேசி ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருப்பார்.

    தளபதி 66 படத்தில் இடம்பெற்றுள்ள சரத்குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் படத்தின் திரைக்கதை மிகச்சிறப்பாக உள்ளதென கூறி, எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vijay, Mahesh babu

    அடுத்த செய்தி