இன்று வெளியாகிறது விஜய் 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
இன்று வெளியாகிறது விஜய் 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
விஜய் 66
விஜய் நடிக்கும் இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இவர்களைத் தவிர சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
விஜய் நடித்து வரும் 'விஜய் 66' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்படும் என படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். இதற்கான முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்தினர்.அங்கு அன்னபூர்ணா ஸ்டுடியோவில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெற்றது.
அதை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய விஜய் 66 படக்குழுவினர் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கினர். குறிப்பாக ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் நடைபெற்று வருகிறது.
விஜய் நடிக்கும் இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இவர்களைத் தவிர சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அதேபோல் படத்திற்கு எஸ்.தமன் இசை அமைக்கிறார். இவர் இதுவரை விஜய் திரைப்படத்திற்கு இசை அமைத்தது கிடையாது. முதல் முறையாக தமிழில் விஜய் கூட்டணி அமைத்துள்ளனர்.
இந்நிலையில் செப்டம்பரில் இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவுபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடிகர் விஜயின் பிறந்த நாள் வருவதையொட்டி, அதற்கு முன்னதாக, இன்று மாலை 6 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிடுவதாக தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.