விஜய் 66 படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் சென்னையில் துவங்குகின்றது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் நடிக்கும் 66வது படம் இன்னும் பெயரிடப்படாமல் தளபதி 66 என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். பிரபு, சரத்குமார், ஷாம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்தில் யோகி பாபுவும் இடம்பெற்றுள்ளார்.
தெலுங்கு முன்னணி இயக்குனர் வம்சி பைடிபள்ளி இந்த படத்தை இயக்க, வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜூ படத்தை தயாரித்து வருகிறார்.
குடும்பக்கதை, காதல், ஆக்சன், சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களை உள்ளடக்கியதாக இந்தப் படம் உருவாகி வருகிறது. விஜய் கடந்த சில ஆண்டுகளாக ஆக்சன் படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
2011-ல் வெளிவந்த நண்பன் படத்திற்கு பின்னர், பெரும்பாலான விஜய் படங்கள் ஆக்சன் படங்களாகவே இருக்கின்றன. இந்நிலையில் ஆக்சன் படங்களுக்கு மிகவும் வித்தியாசமான முறையில் தளபதி 66 படம் உருவாகி வருகிறது.
'தளபதி 66' படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும், கடந்த பத்து வருடங்களில் அவர் நடித்த படங்களை விட இப்படம் வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
Also read... கர்ணன் படத்தை மிஞ்சிய தனுஷின் நானே வருவேன் டிஜிட்டல் விற்பனை
சென்னையில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கிய நிலையில் தொடர்ந்து ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்துவந்தது, பின் சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் இன்று முதல் சென்னையில் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.