• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Thalapathy Vijay: விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் சர்ப்ரைஸ்?

Thalapathy Vijay: விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் சர்ப்ரைஸ்?

விஜய்

விஜய்

விஜய் இடம் பெறும் போஸ்டர் வெளியானால் அதுதான் ரசிகர்களுக்கு சிறந்த பிறந்தநாள் ட்ரீட்டாக இருக்கும்.

  • Share this:
    நடிகர் விஜய்யின் 66-வது பட அறிவிப்பு அவரது பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி இருக்கலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஜூன் 22 ஆம் தேதி தளபதி விஜய் தனது 47-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதற்காக ரசிகர்கள் அனைவரும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர். இணையத்தில் பரவியிருந்த தகவல்களின்படி, விஜய்யின் பிறந்த நாளில் 'தளபதி 66' தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிகிறது. இந்தப் படத்திற்காக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளியுடன் விஜய் கைகோர்க்க உள்ளதாகவும், படத்தை தில் ராஜு தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இருப்பினும், விஜய் தனது பிளான்கள் முழுமையடையாமல் ஒருபோதும் அறிவிக்க மாட்டார், எனவே இந்த பிறந்தநாளில் விஜய் ரசிகர்களுக்கு ஆச்சரியம் இருக்கிறதா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கிடையே, விஜய் தற்போது நடித்து வரும், 'தளபதி 65' படத்திலிருந்து பெரும் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். விஜய் இடம் பெறும் போஸ்டர் வெளியானால் அதுதான் ரசிகர்களுக்கு சிறந்த பிறந்தநாள் ட்ரீட்டாக இருக்கும்.

    சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் தளபதி 65 படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அபர்ணா தாஸ், யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தின் முதல் அட்டவணை படபிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்திருக்கிறது. தளபதி 65 படத்திற்கு அனிருத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: