Thalapathy 65: தளபதி 65 படத்துக்காக வெளிநாடு செல்லும் விஜய்!

Thalapathy 65: தளபதி 65 படத்துக்காக வெளிநாடு செல்லும் விஜய்!

நடிகர் விஜய்

நண்பன் படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய்யுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி என ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ஸா தெரிவித்திருந்தார்.

  • Share this:
    தளபதி 65 படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் வெளிநாடு செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

    'மாஸ்டர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குநர் நெல்சன் திலீப் குமாரின் படத்தில் நடிக்கும் அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. ‘தளபதி 65’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசை அனிருத்.

    தளபதி 65 படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் படத்தில் ஆக்‌ஷன் டைரக்டர்களாக அன்பறிவ் பணியாற்றுவதாக, அவர்களின் குழுவைச் சேர்ந்த திலீப் குமார் தெரிவித்திருந்தார். தவிர நண்பன் படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய்யுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி என ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ஸா தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் தற்போது தளபதி 65 குறித்த ரூசிகர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ளதாம். ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, கிட்டத்தட்ட ஒரு மாதம் ரஷ்யாவில் நடைபெறுகிறதாம். அதற்காக விரைவில் அங்கு செல்லவிருக்கிறாராம் விஜய்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: