தளபதி 65 குறித்த சுவாரஸ்யமான அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது.
பொங்கலுக்கு நடிகர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இதில் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கொரோனா பரவலுக்குப் பிறகு வெளியான பெரிய படமான ‘மாஸ்டர்’ உலகளவில் 220 கோடிக்கும் மேல் வசூலித்தது.
இந்நிலையில் விஜய்யின் அடுத்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. தளபதி 65 என்றழைக்கப்படும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
தளபதி 65 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகின. தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில், படத்தின் இயக்குனர் நெல்சன், லொகேஷன் தேடுவதற்காக ரஷ்யா சென்றுள்ளார். அதோடு ரஷ்யாவில் எடுக்கப்பட்ட படங்களையும் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் நெல்சன். மார்ச் மாதம் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது லொகேஷன் தேடுதலுக்காக ரஷ்யா சென்றுள்ளார் நெல்சன்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்