தளபதி 65 ஷூட்டிங் முடித்து சென்னை திரும்பிய விஜய்

நடிகர் விஜய்

ஜார்ஜியாவில் தளபதி 65 படத்தின் ஷூட்டிங்கை முடித்து சென்னை திரும்பியுள்ளார் நடிகர் விஜய்.

  • Share this:
மாஸ்டர் படத்தை அடுத்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். தற்காலிகமாக ‘தளபதி 65’ என்று அழைக்கப்படும் இந்தப் படத்தில் மலையாள நடிகை அபர்ணா தாஸ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மேலும் முதல்முறையாக விடிவி கணேஷ் இந்தப் படத்தில் விஜய் உடன் இணைந்துள்ளார் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் அங்கு தொடர்ச்சியாக 18 நாட்கள் ஷூட்டிங் பணிகளில் ஈடுபட்ட படக்குழு தற்போது சென்னை திரும்பியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் விஜய் சென்னை விமானநிலையம் வந்தடைந்த போது எடுக்கப்பட்ட வீடியோவும் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.

ஜார்ஜியாவில் தளபதி 65 படத்தின் சண்டைக்காட்சிகள் உள்பட பல முக்கிய சீன்கள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் விஜய் - பூஜா ஹெக்டேவின் டூயட் பாடல் ஒன்றையும் படமாக்கியுள்ளதாக தெரிகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு தமிழகத்தில் செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட உள்ளதா அல்லது வெளிநாடுகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதா என்பது குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை.இந்தியா முழுக்க கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் தொடர்ந்து ‘தளபதி 65’ படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நடைபெறுமா அல்லது நிலைமை சீரான பின்னர் தொடங்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Published by:Sheik Hanifah
First published: