Thalapathy 65: விஜய் பிறந்தநாளில் தளபதி 65 ஃபர்ஸ்ட்லுக்? ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!

தளபதி 65

வரும் ஜூன் 22-ம் தேதி விஜய் தனது 47-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

  • Share this:
    நடிகர் விஜய்யின் பிறந்தாள் தினத்தன்று தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்த்து, அதற்கான ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

    மாஸ்டர் படத்தை அடுத்து நடிகர் விஜய், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கிறார். இவர் ஏற்கனவே கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர். சிவகார்த்திகேயனை வைத்து இவர் இயக்கிய டாக்டர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. விஜய்யை வைத்து இவர் இயக்கும் படத்திற்கு இன்னும் பெயரிடவில்லை. அதனால், தற்காலிகமாக விஜய் 65 என அழைக்கப்படும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

    ஏப்ரல் மாத ஆரம்பத்தில் தளபதி 65 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியது. சண்டைக்காட்சி, பாடல் காட்சி உள்பட பல முக்கிய காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன. இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடர திட்டமிட்ட நிலையில், கொரோனா ஊரடங்கள் தற்போது படப்பிடிப்பு தடைப்பட்டிருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் வரும் ஜூன் 22-ம் தேதி விஜய் தனது 47-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பொதுவாக விஜய்யின் ஒவ்வொரு பிறந்தநாளின் போது அவர் அப்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இந்த பிறந்தநாளில் தளபதி 65 டைட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள். அதோடு #Thalapathy65FirstLook என்ற ஹேஷ்டேக்கையும் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

    தவிர ஜூன் 22-ம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 65 ஃபர்ஸ்லுக்கை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்த சன் பிக்சர்ஸ் திட்டமிட்டிருப்பதாகவும், நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்போம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: