முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Thalapathy 65 First Look : நடிகர் விஜய்யின் 65வது படத்தின் பெயர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு...கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்

Thalapathy 65 First Look : நடிகர் விஜய்யின் 65வது படத்தின் பெயர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு...கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்

 விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர்

விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 65வது படத்துக்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளதை விஜய் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ட்விட்டரில் #BEAST , #Thalapathy65FirstLook , #Vijay65 போன்ற ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை சன் பிக்சர்ஸ் மற்றும் நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். தளபதி 65 படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, அனிருத் இசையமைக்கின்றார்.

இந்நிலையில் வரும் ஜூன் 22-ம் தேதி (நாளை ) நடிகர் விஜய் தனது 47-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சில நடிகர்களை ஃபேமிலி ஆடியன்ஸுக்குப் பிடிக்கும், சிலரை இளைஞர்கள், கல்லூரி மாணவர்களுக்குப் பிடிக்கும், வேறு சிலரையோ குழந்தைகளுக்குப் பிடிக்கும்.

ஆனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்துப் பார்க்கும், ஆதர்ச நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் விஜய். அவரின் பிறந்தநாளின் போது ரசிகர்கள் கூடுதல் உற்சாகமடைந்து கொண்டாடி தீர்ப்பார்கள்.

குறிப்பாக விஜய்யின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும், அவர் நடித்துக் கொண்டிருக்கும் படங்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடும். அந்த வகையில் இந்த வருட பிறந்தநாள் ஸ்பெஷலாக தளபதி 65 பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என கடந்த சில தினங்களாகவே எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், (வரும் ஜூன் 21-ம் தேதி ) இன்று மாலை 6 மணிக்கு தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் முன்னதாக அறிவித்திருந்தது.‘என்ன நண்பா ஃபர்ஸ்ட் லுக்கா? செஞ்சிட்டா போச்சி’ என்ற மினி வீடியோவின் மூலம் இந்த அறிவிப்பை அவர்கள் வெளியிட்டனர்.

ALSO READ |  ’விஜய்க்கு ஸ்டெப் போடுறது சவாலான விஷயம்’ - புகழும் நடன இயக்குநர்கள்!

இதனைத்தொடர்ந்து தற்போது தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 65வது படத்துக்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளதை விஜய் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

விஜய் ரசிகர்கள் தங்கள் இணையதள பக்கங்களில் பீஸ்ட் போஸ்டரை கொண்டாடி வருகின்றனர்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Beast, Thalapathy